உங்கள் அண்ணனாக! விஜயே கைப்பட எழுதிய கடிதமா? வைரலாகும் போட்டோ! என்னக் கூறினார் தெரியுமா?
- நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இன்றைய தேதி குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த கடிதத்தை தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இன்றைய தேதி குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த கடிதத்தை தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
(1 / 5)
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தமிழக பெண்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து அவர் எழுதிய கடிதத்தில், அவர்களைப் பாதுகாக்க யாரை விசாரிக்க முடியும் என்று கேட்டுள்ளார். அவர்களது சகோதரன் என்ற முறையில், கல்வி நிறுவனங்களில் கூட அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
(2 / 5)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கிய பின்னர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து விஜய் அடிக்கடி சமூக வலைத்தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகிறார். அதிலும் சமீபத்தில் இவர் கலந்துக் கொண்ட அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழாவிலும் வேங்கை வயல் குறித்து பேசி இருந்தார். மேலும் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கும் குரல் கொடுத்தார்.
(3 / 5)
இந்நிலையில் விஜய் எழுதிய அக்கடிதத்தில், “அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், எனதருமை தங்கைகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
(4 / 5)
மேலும், " யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்தக் கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகப்பான தமிழ்நாட்டை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனவும் எழுதி வெளியீட்டுள்ளார். .
மற்ற கேலரிக்கள்