Magizh Thirumeni: கிரீன் டீ.. 3 கதைகள்.. அசராமல் நின்ற மகிழ்.. குழம்பிய விஜய்!- மகிழ் - விஜய் சந்திப்பு கதை!
Magizh Thirumeni: டீயை குடித்துவிட்டு, கதை சொல்ல தொடங்கலாமா என்று கேட்டேன். உடனே அவர் தொடங்கலாம் என்றார். பொதுவாக விஜய் சாரை பற்றி திரைத்துறையில் ஒரு கருத்து இருக்கிறது,
(1 / 8)
Magizh Thirumeni: கிரீன் டீ.. 3 கதைகள்.. அசராமல் நின்ற மகிழ்.. குழம்பிய விஜய்!- மகிழ் - விஜய் சந்திப்பு கதை!
(2 / 8)
Thalapathy Vijay: விடாமுயற்சி திரைப்படம் மூலம் தற்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி விஜயை சந்தித்த அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
(3 / 8)
அதில் அவர் பேசும் போது, ‘அப்போது விஜய் சாரிடம் ராம் என்ற மேனேஜர் இருந்தார். அவர் மூலமாகத்தான் நான் விஜயை சந்திக்க முயற்சி செய்தேன். அதனைதொடர்ந்து, அவர் விஜய் சாரிடம் கேட்டுவிட்டு, என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர், விஜய் சார் உங்களை பார்க்க விருப்பப்படுகிறார் என்றார். நான் சாரை சந்திக்க சென்றேன். இதற்கிடையே, தற்போது அவரது மேனஜராக இருக்கும் ஜெகதீஷும் இது தொடர்பாக கேள்விப்பட்டிருந்தார்.
(4 / 8)
விஜய் சாரின் அலுவலகத்தில் நான்..
நான் அவரது அலுவலகத்துக்குச் சென்றவுடன், விஜய் சார் என்னை வாங்க சார்.. என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார். நான் எதுவும் வேண்டாம் சார், கொஞ்சம் வெந்நீர் மட்டும் கொடுங்கள் என்றேன். உடனே அவர் இல்லை.. இல்லை.. கிரீன் டீ குடியுங்கள் என்று சொல்ல, சரி சார் என்று கூறி விட்டேன். டீ வந்தது; அவரே எனக்கு டீயை பரிமாறினார்.
(5 / 8)
டீயை குடித்துவிட்டு, கதை சொல்ல தொடங்கலாமா என்று கேட்டேன். உடனே அவர் தொடங்கலாம் என்றார்.
பொதுவாக விஜய் சாரை பற்றி திரைத்துறையில் ஒரு கருத்து இருக்கிறது,
(6 / 8)
அது என்னவென்றால், அவர் கதை கேட்கும் பொழுது பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டார் என்பது. ஆனால் நான் கவனித்த வரை, கதை சொல்லும் பொழுது அவர் மிக மிக கூர்மையாக கதையை கவனிக்கிறார்.
(7 / 8)
அவர் ஏனோ தானோ வென்றெல்லாம் கதையைக் கேட்கவில்லை. கதை சொல்லி முடித்தவுடன் அவர் எனக்கு நிறைய பாராட்டுகளை தெரிவித்தார். அவரிடம் நான் மொத்தம் மூன்று கதைகளை கூறினேன். அந்த மூன்று கதைகளையும் நான் அவரிடம் ஒரே ஃப்லோவில் சொல்லி முடித்தேன்.
(8 / 8)
அமைதியான விஜய்
கதைகளைசொல்லி முடித்தவுடன் விஜய் சார் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தார். அதனைதொடர்ந்து மகிழ், நீங்கள் என்னை குழப்பி விட்டீர்கள்; மூன்று கதைகளுமே நன்றாக இருக்கிறது; இப்போது நான் எதனை தேர்வு செய்ய என்று என்னிடமே கேட்டார். இதையடுத்து நான் வெளியே வந்தேன். உடனே அவரது மேனேஜர் ராம் சாரிடம் இருந்து போன் வந்தது; விஜய் சார் இப்படி ஆத்மார்த்தமாக பேசி, மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டன; அப்படி எந்த கதையை சொல்லி, அவரை நீங்கள் மயக்கினீர்கள் என்றார்.
தொடர்ந்து, ஜெகதீஷிடம் இருந்தும் எனக்கு போன் வந்தது. அவரும் மிகவும் ஆச்சரியமாக பேசினார். நான் சொன்ன மூன்று கதைகளில் ஒரு கதையை என்னிடமே விஜய் தேர்வு செய்ய சொன்னார். நான் அதை தேர்வு செய்தேன். ஆனால், அந்தப்படம் என்னுடைய முந்தைய கமிட்மெண்டுகளால் செய்ய முடியாமல் போனது’ என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்