Vidaamuyarchi : ‘ஆட்டம் போட்ட அஜித்.. அழகு பொம்மையாக த்ரிஷா..’ விடாமுயற்சி ரொமான்ஸ் ஆல்பம்!
- அஜித்-த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடலான சவுதீகா பாடல் வெளியாகியுள்ள நிலையில், பாடலில் இடம் பெற்றுள்ள அசத்தல் காட்சிகளின் சூப்பர் ஆல்பம் இதோ.
- அஜித்-த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடலான சவுதீகா பாடல் வெளியாகியுள்ள நிலையில், பாடலில் இடம் பெற்றுள்ள அசத்தல் காட்சிகளின் சூப்பர் ஆல்பம் இதோ.
(1 / 10)
மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித், த்ரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. சோனி மியூசிக் சவுத் வெளியிட்டுள்ள அந்த லிரிக் வீடியோவில் இருந்து சில போட்டோக்கள்(Sony Music South)
(2 / 10)
விடாமுயற்சி டீசர் ரொம்ப ஸ்லோவா போவதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதில் பாடல்கள் எப்படி இருக்கப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. அப்படி இருக்க முதல் பாடல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?(Sony Music South)
(3 / 10)
திருமண கொண்டாட்டமாக அமைந்திருக்கும் அந்த பாடலை, துள்ளல் இசையாக துடிப்போடு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். (Sony Music South)
(4 / 10)
‘இருங் பாய்’ என்று சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தையை, பாடல் முழுதும் பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அஜித், ஆடித் தீர்த்திருக்கிறார், குரூப் டான்ஸில் குத்தாட்டம் போட்ட அஜித்தை பார்க்கவே, அழகாக இருக்கிறது.(Sony Music South)
(5 / 10)
அஜித்-த்ரிஷா ஜோடியின் இந்த பாடல், ரொமான்ஸ், டான்ஸ், ராக் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. பப் ஒன்றில், ரிச்சாக எடுக்கப்பட்டுள்ள இந்த பாடல், கண்டிப்பாக ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். (Sony Music South)
(6 / 10)
பாடல் காட்சிகள் மட்டுமின்றி, பாடல் மேக்கிங் வீடியோக்களும் இடை இடையே சேர்க்கப்பட்டுள்ளது. கோட், சூட் அணிந்து, இளமையான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார் அஜித். (Sony Music South)
(7 / 10)
அட்டகாசமான இந்த பாடலை அந்தோணி தாசன் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியிருக்கிறார். பெரும்பாலான பகுதிகள், அந்தோணிதாசன் குரலில் வருகிறது. ‘இலுமினாட்டி’ பாடலை நினைவுபடுத்தும் விதமாக, பாடலின் முழு மூட் இருக்கிறது(Sony Music South)
(8 / 10)
அறிவு இந்த பாடலுக்கான முழு வரிகளை எழுதியுள்ளார். இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக, அதே நேரத்திலும் துள்ளலுக்கு துல்லியமான வரிகளாகவும் பாடல் அமைந்திருக்கிறது.(Sony Music South)
(9 / 10)
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, காட்சிகளை பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஜொலிக்கும் விளக்குகளுக்கு மத்தியில், அஜித்-த்ரிஷா ஜோடியை மிலிர வைத்திருக்கிறது.(Sony Music South)
மற்ற கேலரிக்கள்