MGR Birthday: சினிமா, அரசியல் பான் இந்தியா ஸ்டார்.. மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்ஜிஆர்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mgr Birthday: சினிமா, அரசியல் பான் இந்தியா ஸ்டார்.. மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்ஜிஆர்

MGR Birthday: சினிமா, அரசியல் பான் இந்தியா ஸ்டார்.. மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்ஜிஆர்

Jan 17, 2025 06:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 17, 2025 06:30 AM , IST

  • MGR Birthday: 1950களில் இருந்து 1987 வரை இந்தியா முழவதும் செல்வாக்கு பெற்ற பான் இந்தியா நடிகராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல், அரசியல் தலைவராகவும் மக்களின் மனதில் குடி புகுந்து தனக்கென அழியா இடத்தையும், புகழையும் பெற்றிருக்கும் எம்.ஜி.ஆர். 108வது பிறந்தநாள் இன்று

நடிகர், அரசியல் தலைவர், அதிமுக கட்சியை உருவாக்கியவர், முன்னாள் முதலமைச்சர் என பன்முகங்களை கொண்டிருக்கும் எம்ஜிஆர், இந்திய குடிமகனுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவராகவும் இருக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவரை பற்றியும், அவரது சினிமா வாழ்க்கை பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்

(1 / 6)

சினிமாவில் நடிப்பு தவிர கார் ரேஸிங், சமையல், போட்டோகிராபி என பல்துறைகளிலும் வித்தை காட்டி வரும் அஜித்குமார் பற்றி பெருமையாக பேசுகிறோம். ஆனால் இதற்கும் விதை போட்டு முன்னோடியாக இருந்தவர் எம்ஜிஆர் என்று கூறலாம். ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் கேமராவை தன்னுடன் மறக்காமல் எடுத்து செல்லும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். விரும்பியவாறு புகைப்படங்களை எடுத்து மகி்ழும் அவர் அந்த காலகட்டத்தில் வந்த பல்வேறு வகையான கேமராக்களை தனது வீட்டில் சேகரித்து வைத்திருந்தார்

(2 / 6)

தமிழ் சினிமாவின் மூலமும், அரசியல் வழியாகவும் மக்களை கட்டிப்போட்ட எம்ஜிஆர் என்ற பெயர் மருதூர் கோபால் மேனன் ராமச்சந்திரன் என்பதனை சுருக்கமே. ஆனால் மக்கள் இவருக்கு வைத்த பெயரும், அடைமொழியும் மக்கள் திலகம், இதயக்கனி, புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், ஏழைகளின் தெய்வம் என சொல்லிக்கொண்டே போகலாம்

(3 / 6)

உலக நாயகன் கமல்ஹாசன் தனது சினிமாக்களில் பல்வேறு எதிர்கால விஷயங்களை தீர்கதரிசனமாக கூறியிருப்பதையும், கணித்திருப்பதையும் சிலாகித்து பேசுகிறாம். அவரை போல் எம்ஜிஆரும் தீர்க்க தரிசனம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது 1970 காலகட்டத்தில் தொலைக்காட்சி பெட்டியெல்லாம் தமிழ்நாட்டில் பெரிதாக வராத காலகட்டத்தில், தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்று சொன்ன விஷயம் நிஜத்தில் நடந்தது 

(4 / 6)

மக்களை பொறுத்தவரை எம்ஜிஆர் என்பவர் ஒரு நடிகர் என்றாலும், திரையுலகினரை பொறுத்தவரை நடிப்பு தவிர அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் கரைத்து குடித்தவராக இருந்துள்ளார். சிறந்த படத்தொகுப்பாளரான எம்ஜிஆர், எந்த மாதிரியான காட்சியையும் கோர்வையாக எடிட்டிங் செய்வதில் வல்லவர்

(5 / 6)

தனது வாழ்நாளில் மூன்று முறை மரணத்தின் விழிம்பு வரை சென்று உயிர் பிழைத்த எம்ஜிஆர் முப்பிறவி கண்டவர் என்று பலரும் அழைப்பதுண்டு. நாடக நடிகராக இருந்தபோது சுமார் 70 கிலோ எடை கொண்ட மணி எம்ஜிஆர் காலில் விழுந்து, அதிலிருந்து மீண்டார். பின்னர் 1967இல் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டு உயிர் பிழைத்தார். கடைசியாக 1984இல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்