Singer Jeyachandran: காலத்தால் அழியாத காந்த குரலோன் ஜெயசந்திரன் மறைவு! அவரின் குரலில் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Singer Jeyachandran: காலத்தால் அழியாத காந்த குரலோன் ஜெயசந்திரன் மறைவு! அவரின் குரலில் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள்!

Singer Jeyachandran: காலத்தால் அழியாத காந்த குரலோன் ஜெயசந்திரன் மறைவு! அவரின் குரலில் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள்!

Jan 09, 2025 10:54 PM IST Suguna Devi P
Jan 09, 2025 10:54 PM , IST

  • தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் வெற்றி அதன் பாடல்களினாலேயே சாத்தியம் ஆனது. அதனை சாத்தியப்படுத்தியதில் பாடகர் ஜெயசந்திரனுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு. இவரது காந்த குரலில் வந்த மெல்லிசை பாடல்கள் அனைத்தும் இன்றும் மனதை தாலாட்டும். அவரது குரலில் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள் இதோ. 

மலையாள மொழியை தாய்மொழியாக கொண்ட பாடகர்களே தமிழை மிகவும் சரியாக உச்சரித்து பாடுவார்கள். அந்த வரிசையில் ஜெயசந்திரனுக்கு எப்போதும் முதல் இடம் தான். இவரது உச்சரிப்பு ஒவ்வொன்றிலும் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தமிழர்களை பல காலமாக தாலாட்டி பாட தூங்க வைத்த பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமை கொண்ட இவர் இன்று(09/01/2022025)உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இவருக்கு 80 வயது ஆகிறது. 

(1 / 9)

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பல பாடல்களைப் பாடி தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்து இருந்தாலும். ஜெயசந்திரன் தமிழில் அறிமுகமானது என்னவோ எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் தான்.  இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கி  தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பார் ஜெயச்சந்திரன்.  "வசந்தகால நதிகளிலே என்னும் இந்த பாடல் ஜெயச்சந்திரனின் ஓங்கி ஒலித்த குரலுக்கு ரஜினிகாந்தின் முகபாவனைகள் கச்சிதமாக பொருந்தி இருக்கும். இந்த பாடல் ஜெயச்சந்திரனின் பட்டியலில் முக்கியமாக கேட்க வேண்டிய பாடல்களில் ஒன்றாகும்.

(2 / 9)

இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் கமல் மற்றும் சுஜாதா நடிப்பில் வெளியான கடல் மீன்கள் படத்தில் வரும் “தாலாட்டுதே வானம்” பாடலை ஜெயசந்திரன் பாடியிருப்பார். இந்த பாடல் காட்சியும்  இயற்கை எழிலோடு அமைந்திருக்கும்.  நம்மையும்  அதே படகில்  கொண்டு செல்லும் அவரின் குரல்.  இந்த பாடலும் நிச்சயம் கேட்க வேண்டிய பாடல்களில் ஒன்றாகும். 

(3 / 9)

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான வைதேகி காத்திருந்தால் திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்களை பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். இந்த மூன்று பாடல்களும் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு”, “காத்திருந்து காத்திருந்து” மற்றும்  “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” ஆகிய மூன்று பாடல்களும் இளையராஜாவின் இனிக்கும் இசையில் இனிமையான அனுபவங்களையும் மனதின் துயரங்களையும் பேசிவிட்டு சென்றிருக்கும். கேப்டனின் கேரியரில் முக்கியமான பாடல்களாக இவை அமைந்துள்ளது. 

(4 / 9)

கேப்டன் விஜய்காந்த் திரையுலக பயணத்தில் பெரும்பாலான பாடல்களை ஜெயசந்திரன் பாடியுள்ளார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் “மயங்கினேன் தயங்கினேன்” பாடலும் “தேகம் சிறகடிக்கும்” என இரு பாடல்களை பாடியுள்ளார். 

(5 / 9)

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெயசந்திரன் பாடிய “கொடியிலே மல்லிகைப் பூ”பாடல் இன்று வரை பலரது விருப்ப பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்பாடலும் இவரது குரலில் கட்டாயம் கேட்க வேண்டிய பாடலாகும். 

(6 / 9)

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா நடித்து வெளியான படம் காதலன். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இவரது இசையில் “கொள்ளையிலே தென்னை வைத்து” என்ற தாலாட்டு பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். இந்த பாடலைக் கேட்டால் போதும் குழந்தை மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தானாக தூக்கம் வந்துவிடும். இப்பாடலும் கேட்க வேண்டிய ஒரு பாடலாக உள்ளது. 

(7 / 9)

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடித்து வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையில் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே” என இவர் பாடத்தொடங்கும் போதே மனம் கரையத் தொடங்க விடும். 

(8 / 9)

ஜெயசந்திரன் ஏறத்தாழ 16 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் மறைந்தாலும் இவரின் இனிமையான குரல் என்றும் நமது காதுகளில் தாலாட்டாய் ஒலித்துக் கொண்டிருக்கும். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவரது பாடல்களால் நினைவு கூர்வோம். 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்