Actress Aishwariyaa: ‘பிரபுன்னா எனக்கு பைத்தியம்.. அவருக்கு சின்ன வீடா கூட போக ரெடி' - ஐஸ்வர்யா
Actress Aishwariyaa: அங்கிருந்து இப்போது வரை எனக்கு பிரபு சார் என்றால் மிகவும் இஷ்டம். நான் பிரபுவின் வெறித்தனமான ரசிகை என்பது அவருடைய மனைவியான புனிதா அக்காவிற்கு நன்றாகத் தெரியும். நாங்கள் இணைந்து ‘ஆம்பள’ திரைப்படத்தில் நடித்தோம். - ஐஸ்வர்யா
(1 / 6)
Actress Aishwariyaa: ‘பிரபுன்னா எனக்கு பைத்தியம்.. அவருக்கு சின்ன வீடா கூட போக ரெடி' - ஐஸ்வர்யா
(2 / 6)
தனக்கும் பிரபுவிற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் பிரபு சாரின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய 16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான். அன்றும் இன்றும் என்றும் என நான் சாகும் வரை நான் அவரின் ரசிகையாகவே இருப்பேன்.
நான் என்னுடைய 16 வது வயதில் பாலைவன ரோஜா திரைப்படத்தை பார்த்தேன். அந்தப் படத்தில்தான் பிரபுசாரை முதன் முறையாக பார்த்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.
(3 / 6)
அங்கிருந்து இப்போது வரை எனக்கு பிரபு சார் என்றால் மிகவும் இஷ்டம். நான் பிரபுவின் வெறித்தனமான ரசிகை என்பது அவருடைய மனைவியான புனிதா அக்காவிற்கு நன்றாகத் தெரியும்.
நாங்கள் இணைந்து ‘ஆம்பள’ திரைப்படத்தில் நடித்தோம்.
(4 / 6)
அப்போது அவரிடம் விளையாட்டாக என்னை பெரிய வீடாகவோ, அல்லது சின்ன வீடாகவோ என எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறைந்திருந்து பார்த்தால் மட்டும் போதும் என்று சொன்னேன்.
புனிதா அக்காவும் மாமா என்றால் ஐஸ்வர்யாவுக்கு பைத்தியம் என்று சொல்வார். என்னால் அவரைத் தாண்டி வேறு ஒருவரை அந்த இடத்தில் வைத்து பார்க்கவே முடியாது. அந்தளவு அவரை நான் காதலிக்கிறேன்.
சுயம்வரம் திரைப்படத்தில் முதலில் கமிட் ஆனது வேறு ஒரு நடிகை.
(5 / 6)
ஆனால் அதில் கழிப்பறை தொடர்பான காட்சிகள் இருந்த காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சென்று விட்டார்.
மற்ற கேலரிக்கள்