“8 மணி நேர தூக்கம் எனக்கு கட்டாயம்.. தமிழ் தாய்மொழி இல்லதான்.. ஆனால் இப்ப அப்படி இல்ல” - வேதிகா பேட்டி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “8 மணி நேர தூக்கம் எனக்கு கட்டாயம்.. தமிழ் தாய்மொழி இல்லதான்.. ஆனால் இப்ப அப்படி இல்ல” - வேதிகா பேட்டி

“8 மணி நேர தூக்கம் எனக்கு கட்டாயம்.. தமிழ் தாய்மொழி இல்லதான்.. ஆனால் இப்ப அப்படி இல்ல” - வேதிகா பேட்டி

Dec 23, 2024 07:49 AM IST Kalyani Pandiyan S
Dec 23, 2024 07:49 AM , IST

என்னோட மைண்ட் நல்லா இருந்தாத்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னால இந்த மாதிரி விஷயங்கள்ல என்ன முழுசா கொடுக்க முடியும். -  வேதிகா 

சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம். அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.  

(1 / 7)

தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.     

(2 / 7)

அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன். அப்போது அவர் குறித்து பெரிதான சர்ச்சைகள் வராதது குறித்து கேட்டேன்.  

(3 / 7)

வேதிகாவிற்கு பெருசா உங்கள பத்தி சர்ச்சைகளே இல்லையே?என்ன சுத்தி, எனக்கான மரியாதை வட்டம்னு ஒன்னு இருக்கு. அந்த வட்டத்த தாண்டி யாரையும் நான் நெருங்கவிட மாட்டேன். என்னோட பர்சனல் லைஃப் வேற..  

(4 / 7)

என்னோட தொழில் வாழ்க்கை வேற.. நான் பெருசா நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்குறது கிடையாது. காரணம், எனக்கு 8 மணி நேர தூக்கம் ரொம்ப முக்கியம். அப்பதான் அடுத்தநாள் என்னோட மைண்ட் ஃப்ரஷ்ஷா இருக்கும். தமிழ் என்னோட தாய்மொழி கிடையாது. 

(5 / 7)

ஆனா, இப்ப அதுதான் என்னோட தாய்மொழி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். என்னோட மைண்ட் நல்லா இருந்தாத்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னால இந்த மாதிரி விஷயங்கள்ல என்ன முழுசா கொடுக்க முடியும். 

(6 / 7)

இதுக்காவே நான் வெளிய போறதில்ல. நான் எல்லோரோடையும் சகஜமா பழகுற பர்சன் கிடையாது. அதனாலேயே என்கிட்ட யாரும் பெருசா வரமாட்டாங்க.. அதுவும் என்னப்பத்தி பெருசா சர்ச்சைகள் வராததிற்கு காரணம்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்