“காவியத்தலைவன், பரதேசி படங்கள் ஃப்ளாப் ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும் அந்தப்படங்கள்தான்” - வேதிகா ஓப்பன் டாக்!
“அந்த படங்கள் மூலமா எனக்கு நிறைய மரியாதை கிடைச்சிருக்கு... அதுல நான் வெளிப்படுத்திருந்த நடிப்ப பார்த்துட்டு கன்னடத்துல சிவராஜ்குமார் நடிச்சு 100 நாள் ஓடுன சிவலிங்கா படத்துல பி.வாசு சார் என்ன கமிட் பண்ணார்.” - வேதிகா!
(1 / 8)
“காவியத்தலைவன், பரதேசி படங்கள் ஃப்ளாப் ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும் அந்தப்படங்கள்தான்” - வேதிகா ஓப்பன் டாக்!
(2 / 8)
சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம். அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.
(3 / 8)
அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன். அப்போது பரதேசி, காவியத்தலைவன் திரைப்படங்களில் நன்றாக நடித்திருந்தாலும், அந்தப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாதது குறித்து கேட்டேன்.
(4 / 8)
பரதேசி, காவியத்தலைவன் படங்கள்ல உங்களோட நடிப்புக்கு பாராட்டு கிடைச்சாலும், அந்தப்படங்கள் பெருசா வரவேற்பு பெறலையே? “அத பத்தி நான் என்னைக்குமே கவலைப்பட்டது கிடையாது. என்ன பொருத்தவரை, எனக்கான சக்சஸ், நான் எனக்கு கிடைச்ச ரோல ஒழுங்கா பண்ணனும். அதுல என்னோட முழு ஃபோக்கஸூம் இருக்கணும். அத அந்தப்படங்கள்லையும் நான் செஞ்சேன்.
(5 / 8)
அந்த படங்கள் மூலமா எனக்கு நிறைய மரியாதை கிடைச்சிருக்கு... அதுல நான் வெளிப்படுத்திருந்த நடிப்ப பார்த்துட்டு கன்னடத்துல சிவராஜ்குமார் நடிச்சு 100 நாள் ஓடுன சிவலிங்கா படத்துல பி.வாசு சார் என்ன கமிட் பண்ணார்.
மற்ற கேலரிக்கள்