“இவளெல்லாம் மேனஜரான்னு சொல்லி..வாய்ப்பை பறித்த அந்த நபரின் ஈகோ.. சாப்பாடு இல்லாமதான் இங்க” - வாணி போஜன்!
அந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு போன் செய்து, நீங்கள் குழுவில் பணியாற்றலாம். ஆனால், மேனஜராக மாற முடியாது என்று கூறிவிட்டனர். இருக்குறதுக்கு விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கதை மாதிரி.. கடைசியில் ஒன்றும் இல்லாமல் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டது. - வாணி போஜன்!
(1 / 6)
பிரபல நடிகையான வாணி போஜன் தான் சீரியலுக்கு வந்த கதையை பற்றி வாவ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் பேசும் போது, “ கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு தனியார் ஏர்லைனில் சூப்பர் வைசராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனக்கு டிகிரி கிடையாது. ஆனால், நான் நன்றாக பேசுவேன். மக்களுக்கும் அது பிடிக்கும். அதனால், பணிக்குச் சேர்ந்த 2 வருடத்திலேயே எனக்கு புரோமோஷன் கொடுத்து விட்டார்கள். அந்த இடத்தில்தான் நான் பணத்தை பார்த்தேன். சம்பாதிக்க ஆரம்பித்தேன். எல்லாம் கிடைத்தது.
(2 / 6)
மேனஜர் அழைப்புஅந்த நேரத்தில் எனக்கு இன்னொரு ஏர் லைனில் இருந்து மேனஜர் பதவிக்கான ஆஃபர் வந்தது. அதில் என்னை மேனஜராக உறுதியும் செய்து விட்டனர். இந்த நிலையில், அங்கிருந்த ஒரு நபர்.. அவளுக்கு டிகிரியே இல்லை.. ஆகையால், எனக்கு மேனஜர் வேலையை கொடுக்கக்கூடாது என்று கூறி விட்டார்.
(3 / 6)
இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு போன் செய்து, நீங்கள் குழுவில் பணியாற்றலாம். ஆனால், மேனஜராக மாற முடியாது என்று கூறிவிட்டனர். இருக்குறதுக்கு விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கதை மாதிரி.. கடைசியில் ஒன்றும் இல்லாமல் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டது.
(4 / 6)
கிட்டத்தட்ட ஒரு வருடம் நான் எதுவும் செய்யாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தேன். நான்தான் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால், எல்லாம் மொத்தமாக உடைந்து போய் விட்டது..
(5 / 6)
நடுங்கிய குடும்பம்ஒரு முறை தனியார் ஜவுளிக்கடை ஒன்றிற்காக நான் போஸ் கொடுத்த போஸ்டரை என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்து, என் அம்மாவிடம் சொல்லி.. என்ன வாணி நடிக்கிறாளாமே.. அது வாணிதானே என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
(6 / 6)
அதைகேட்ட அவர்கள் பயந்து விட்டார்கள். காரணம், திரைத்துறை என்றாலே மோசமாக இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் விஜய் டிவி வாய்ப்பு வந்த போது, நான் அந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. காரணம் அடுத்த வேளைக்கு நான் சாப்பிட வேண்டும். என்னைப்பற்றி பேசுகிறவர்கள் யாரும் எங்கள் குடும்பத்திற்கு சாப்பாடு போட மாட்டார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் என்னுடைய சின்னத்திரைப்பயணம்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்