சாதி படம் எடுப்பீங்களா? - ‘ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு.. நான் வேற நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!
சாதி என்ற ஒன்று இருந்தால்தானே நான் அது பற்றி கருத்து கூற முடியும்.’ என்ற பாலாவிடம், சாதி இப்போதும் இருக்கிறதே என்று பதில் கேள்வி கேட்ட பொழுது, ‘இவர்கள் இருக்கிறது என்று கூறிக் கொண்டால் போதுமா... சாதி என்பது மனிதர்கள் உருவாக்கியது; கொழுக்கட்டை பிடித்தது போல… என்றார்
(1 / 9)
சாதி படம் எடுப்பீங்களா? - ‘ஏற்கனவே கொதிச்சு போய்தான் இருக்கு.. நான் வேற நெருப்ப கிளறி விட நான் விரும்பல’ - பாலா!
(2 / 9)
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
(3 / 9)
இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார்.இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில், அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் சாதி ரீதியான திரைப்படங்கள் எடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
(4 / 9)
சாதி என்ற ஒன்று இல்லைஅதற்கு பதிலளித்த பாலா, ‘சாதி என்ற ஒன்று இருந்தால்தானே நான் அது பற்றி கருத்து கூற முடியும்.’ என்றார். இதையடுத்து சாதி இப்போதும் இருக்கிறதே என்று பதில் கேள்வி கேட்ட பொழுது, ‘இவர்கள் இருக்கிறது என்று கூறிக் கொண்டால் போதுமா... சாதி என்பது மனிதர்கள் உருவாக்கியது; கொழுக்கட்டை பிடித்தது போல...
(7 / 9)
தானாக அடங்கட்டும்இதையடுத்து நீங்கள் ஒரு ஆணித்தரமாக சாதி ரீதியான படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா என்று கேட்ட பொழுது, ‘ஏற்கனவே கொதித்துப் போய் தான் இருக்கிறது;
மற்ற கேலரிக்கள்