தலைக்கு ஏறிய போதை.. நிலைதடுமாறி நான் பட்ட பாடு.. ‘ கொஞ்சம் நாள்தான் தாங்கும்னு சொன்னாங்க’ - பாலா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைக்கு ஏறிய போதை.. நிலைதடுமாறி நான் பட்ட பாடு.. ‘ கொஞ்சம் நாள்தான் தாங்கும்னு சொன்னாங்க’ - பாலா பேட்டி!

தலைக்கு ஏறிய போதை.. நிலைதடுமாறி நான் பட்ட பாடு.. ‘ கொஞ்சம் நாள்தான் தாங்கும்னு சொன்னாங்க’ - பாலா பேட்டி!

Dec 29, 2024 02:33 PM IST Kalyani Pandiyan S
Dec 29, 2024 02:33 PM , IST

உடல்நிலை மோசமாகி நிலைதடுமாற ஆரம்பித்து விட்டேன். என் குடும்பத்தினர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கப்போகிறான். அவன் இஷ்டப்படி இருந்து விட்டு போகிறான் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. - இயக்குநர் பாலா!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார்.  ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார். இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.  இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் அவரின் பல்வேறு பர்சனல் விஷயங்களை அவர் ஷேர் செய்திருக்கிறார்.

(1 / 7)

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். 

ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார். 

இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. 

இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் அவரின் பல்வேறு பர்சனல் விஷயங்களை அவர் ஷேர் செய்திருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு உடலுக்கு கேடுவிளைவிக்கக்கூடிய சில தவறான பழக்க வழக்கங்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் நான் அதன் உச்சத்தை தொட்டேன். 

(2 / 7)

அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு உடலுக்கு கேடுவிளைவிக்கக்கூடிய சில தவறான பழக்க வழக்கங்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் நான் அதன் உச்சத்தை தொட்டேன். 

விளைவு, உடல்நிலை மோசமாகி நிலைதடுமாற ஆரம்பித்து விட்டேன். என் குடும்பத்தினர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கப்போகிறான். அவன் இஷ்டப்படி இருந்து விட்டு போகிறான் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

(3 / 7)

விளைவு, உடல்நிலை மோசமாகி நிலைதடுமாற ஆரம்பித்து விட்டேன். என் குடும்பத்தினர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கப்போகிறான். அவன் இஷ்டப்படி இருந்து விட்டு போகிறான் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

7 நாட்கள் தூக்கம்ஒரு முறை உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் என்னை அனுமதித்திருந்த போது, போதையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தேன். நான் விழித்த பார்த்த போது என்னிடம் அதைச் சொன்னார்கள். அந்த நேரம்தான் இந்த சனியனை எப்படியாவது விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

(4 / 7)

7 நாட்கள் தூக்கம்

ஒரு முறை உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் என்னை அனுமதித்திருந்த போது, போதையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தேன். நான் விழித்த பார்த்த போது என்னிடம் அதைச் சொன்னார்கள். அந்த நேரம்தான் இந்த சனியனை எப்படியாவது விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

இதற்கிடையே, வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி வந்தது. படிப்பு பெரிதாக இல்லை. அப்போது, சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம்; உழைப்பு மட்டும் இருந்தால் போதும் என்பது தெரிந்தது. 

(5 / 7)

இதற்கிடையே, வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி வந்தது. படிப்பு பெரிதாக இல்லை. அப்போது, சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம்; உழைப்பு மட்டும் இருந்தால் போதும் என்பது தெரிந்தது. 

இதையடுத்துதான் நான் சினிமாவிற்கு முயற்சி செய்தேன். பாலு மகேந்திராவிடம் தான் சேர வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக போராடி, அவருடன் உதவி இயக்குனராக சேர்த்தேன்.சினிமாவிற்கு சேரும் பொழுது நாய் படாத பாடு பட போகிறேன் என்று நினைத்தேன். 

(6 / 7)

இதையடுத்துதான் நான் சினிமாவிற்கு முயற்சி செய்தேன். பாலு மகேந்திராவிடம் தான் சேர வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக போராடி, அவருடன் உதவி இயக்குனராக சேர்த்தேன்.

சினிமாவிற்கு சேரும் பொழுது நாய் படாத பாடு பட போகிறேன் என்று நினைத்தேன். 

என் நண்பனிடம் இதுகுறித்து கேட்டேன். அவன் நீ நாய் படாத பாடு பட மாட்டாய்; சொறி நாய் படாத பாடு படுவாய் என்றான்; உண்மையில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.’ என்று பேசினார்.

(7 / 7)

என் நண்பனிடம் இதுகுறித்து கேட்டேன். அவன் நீ நாய் படாத பாடு பட மாட்டாய்; சொறி நாய் படாத பாடு படுவாய் என்றான்; உண்மையில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.’ என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்