Premji Marriage: ‘இயற்கை வைத்தியம்.. உச்சி வெயில் தாங்காத உடம்பு’ - கல்யாணத்திற்கு இளையராஜா வராததிற்கு இதுதான் காரணமாம்!
Premji Marriage: இளையராஜாவைப் பொறுத்த வரை அவர் ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்றால், அவருக்கு நீண்ட தூர பயணம் பெரிதாக ஒத்துக் கொள்ளாது. - இளையராஜா வராததிற்கு காரணம் இதுதான்
(1 / 5)
Premji Marriage: ‘இயற்கை வைத்தியம்.. உச்சி வெயில் தாங்காத உடம்பு’ - கல்யாணத்திற்கு இளையராஜா வராததிற்கு இதுதான் காரணமாம்!
(2 / 5)
Premji Marriage: பிரேம்ஜியின் கல்யாணம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். கொரோனாவில் முளைத்த காதல்இது குறித்து அவர் பேசும் போது, “பிரேம்ஜியின் கல்யாணம் குறித்து பலரும் யூடியூப் சேனல்களில், பலவிதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலம் என்பது எல்லோருக்கும் கஷ்டமானகாலம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பிரேம்ஜிக்கு அது கொஞ்சம் ஆனந்தமான காலகட்டமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் இந்துவுக்கும், பிரேம்ஜிக்கும் இடையே அப்போதுதான் காதல் மலர்ந்தது.
(3 / 5)
இன்ஸ்டாகிராமில்தான் இரண்டு பேருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்து, ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல, பிரேம்ஜி இன்ஸ்டாவில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு எதிர் கமெண்டுகளை இந்து போட, அதற்கு பிரேம்ஜியும் பதில் கொடுக்க, இருவருக்கும் இடையே பழக்கம் உருவாகி இருக்கிறது. துண்டான காதல்இப்படி நீண்ட நாட்களாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருமே தொடர்பை துண்டித்து விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணே பிரேம்ஜியை தொடர்பு கொண்டு என்ன, என்னை மறந்து விட்டீர்களா? ஞாபகம் இல்லையா என்று பேசி, மீண்டும் உறவை புதுப்பித்து இருக்கிறார்.
(4 / 5)
இதனையடுத்து இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து இருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் பிரேம்ஜியின் வயதும், அந்தப் பெண்ணின் அம்மாவின் வயதும் ஒரே வயது. நான் கிண்டலாக சொல்லவில்லை, பெரும்பாலும் சினிமாக்காரர்கள் தன்னுடைய அந்தஸ்து என்ன? நம்மிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதையெல்லாம் இது போன்ற நல்ல நிகழ்வு போது கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.1 1/2 வருடங்களாக கங்கை அமரன் வீட்டில் லிவிங் டு கெதரில்பிரேம்ஜிக்கு பெண் வீட்டார் தரப்பு பற்றி தெரியவருகிறது. ஆனால், அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து பிரேம்ஜியும், இந்துவும் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களாக கங்கை அமரன் வீட்டில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்திருக்கிறார்ள். இதையடுத்துதான் கங்கை அமரன் வெளியே சென்று இருக்கிறார். அதனை தொடர்ந்துதான் பெற்றோர் தரப்பில் இருவரும் சம்மதம் வாங்கி, மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
(5 / 5)
இவர்களது திருமணம் திருத்தணியில் நடைபெற்றது.அங்கு நடைபெற்ற அந்த கல்யாணத்திற்கு, பெண்ணின் வீட்டார் தரப்பிலிருந்து பத்துக்கும் மேற்பட்டோர் கூட வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெங்கட்பிரபு தரப்பில் இருந்து, நீங்கள் கூப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்று சொல்லி ஒரு கூட்டமே வந்திருக்கிறது.இந்த கல்யாணத்தில் யுவன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளாது பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. இளையராஜாவைப் பொறுத்த வரை அவர் ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்றால், அவருக்கு நீண்ட தூர பயணம் பெரிதாக ஒத்துக் கொள்ளாது. இன்னொன்று வெயிலும், அவர் உடம்புக்கு செட் ஆகாது. இப்போது அவர் இயற்கை மருத்துவத்தில் வேறு இருக்கிறார். அதனால், முன்பு போல அவரால் நாள் முழுக்க பணியாற்ற முடியவில்லை. மற்றொரு விஷயம் என்னவென்றால், இளையராஜா அந்த நாளில் வெளி மாநிலத்தில் வேறு ஒரு இசைக்கச்சேரி நடத்த, ஒப்பந்தம் செய்து விட்டார். இதனால் தான் அவரால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்