Foodie characters: ‘நமக்கு சோறு தான் முக்கியம்’ மறக்க முடியாத கிடாக் கறி கதாபாத்திரங்கள்!
- Tamil Heros: ‘எலும்பு கடிப்பதற்கும்.. கிடாக் கறி கடிப்பதற்கும்’ தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்கள் அடையாளமாக திகழ்கின்றன. அப்படி மறக்க முடியாத சாப்பாடு ப்ரியர்களாக நம் மனதில் வாழும் கதாபாத்திரங்கள் யார் யார்?
- Tamil Heros: ‘எலும்பு கடிப்பதற்கும்.. கிடாக் கறி கடிப்பதற்கும்’ தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்கள் அடையாளமாக திகழ்கின்றன. அப்படி மறக்க முடியாத சாப்பாடு ப்ரியர்களாக நம் மனதில் வாழும் கதாபாத்திரங்கள் யார் யார்?
(1 / 6)
நகைச்சுவையே விருந்து தான், அதிலும் விருந்தை வைத்து நகைச்சுவை என்றால் சொல்லவா வேண்டும்? சாப்பாட்டு ராமனை கேள்விப்பட்டிருப்போன், ஆனால் அதுவே கதாபாத்திரமாகி சாப்பாடு ஹீரோக்களாக வரும் போது, நம் மனதில் பதிகிறது. அப்படி, கிடாக் கறிக் கடித்து இன்றும், நம் நினைவில் காரசாரமாக பதிந்திருக்கும் கதாபாத்திரங்களை கொஞ்சம் பார்க்கலாம்.
(2 / 6)
சமீபத்திய 2K கிட்ஸ் சாப்பாட்டு அடையாளம் இவர் தான். பறப்பது, மிதப்பது, ஊர்வது, முளைப்பது என பார்ப்பதை எல்லாம் சாப்பிடுபவர். இவரை வைத்து தான், கைதியில் டெல்லி என்கிற கதாபாத்திரமே உருவானது என்று இயக்குனரே கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு இரை மீது ஆர்வமுள்ளவர், நிஜத்திலும்.
(3 / 6)
கிடா விருந்தின் பிஷ்மீர் என்றால் அது ராஜ்கிரன் தான். ஆரம்ப காலத்திலிருந்தே தண்ணீரைக் கூட குண்டானில் குடிக்கும் ஆற்றல் கொண்டவர். சைடு டிஷ் கூட சாப்பாடு போல போகும் என்றால், சாப்பாட்டின் நிலை? பந்தியில் இருந்து படையல் வரை ஒரு பிடி பிடிக்கும் கதாபாத்திரம், ராஜ்கிரண் கதாபாத்திரங்கள் தான்.
(4 / 6)
ஊறுகாயை கூட விட்டு வைக்காத அக்மார்க் அரக்க உணவாளி. கை கழுவுவதற்கு கூட ரசம் தான் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். ஆளுக்கும், ஆசைக்கும் சம்மந்தமே இருக்காது. கலர் கலர் ஆடைகளுக்கு அடையாளமாக அறியப்பட்டவர், ஒரே பந்தியில் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சாம்பார், வடை, அப்பளத்திற்கே இந்த நிலை என்றால், கிடா கறி சிக்கினால்,.. ராமராஜன் வேறு ரகம்!
(5 / 6)
கிட்டத்தட்ட சாப்பாடு காட்சிகளுக்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்தவர் செந்தில். சோற்றில் ஊரணி, சாம்பாரில் தெப்பக்குளம் என இவரது பந்தி, படு ஃபேமஸ். சாப்பாட்டிற்காகவும், அதை சாப்பிடுவதற்காகவும் பலமுறை அறியப்படும் கதாபாத்திரம் இவருடையது. அதற்காக அடி வாங்குவதெல்லாம் தனிக்கதை.
(6 / 6)
பதுக்கலுக்கு பாடம் எடுத்தவர் சிங்கமுத்து. ஒரு கவள சோற்றில், 15 முட்டையை எப்படி பதுக்கலாம் என்பதை இவரிடம் தான் கற்க வேண்டும். எதிரில் அமர்ந்திருப்பவரை எரிச்சலடைய வைக்கும் அளவிற்கு, அகோர பசிக்கு சொந்தக்காரர். கொஞ்சம் உற்றுப்பார்த்தால், உக்கிரம் என்று நினைத்து சாப்பாட்டை வேட்டி, சட்டையில் பார்சல் எடுத்துச் சென்று சாப்பிடும் அளவிற்கு உணவை வீணாக்காத வீரதீரத்திற்கு சொந்தக்கார கதாபாத்திரம்.
மற்ற கேலரிக்கள்