தி கோட் பட ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி குறித்து யாரும் அறியாத உண்மைகள்! என்ன படிச்சு இருக்காங்க தெரியுமா?
- சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வேறு ஒரு துறையில் சிறந்து விளங்குபவராக கூட இருக்கலாம். அந்த வரிசையில் பல நடிகைகள் பலத் துறை வல்லுனர்களாக இருக்கின்றனர். ஆனால் அது அணைவருக்கும் தெரிவதில்லை. அது போல ஒரு நடிகை தான் மீனாட்சி சௌத்ரி. அவர் குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.

(1 / 6)
தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து இருந்தாலும், தி கோட் படத்தில் விஜயுடன் போட்ட குத்தாட்டத்தில் தான் பல ரசிகர்களுக்கு அறிமுகமானார் மீனாட்சி சவுத்ரி. ஆனால் அதனையடுத்து தெலுங்கில் இவர் நடித்து வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் இவரது நடிப்பிற்கு சிறப்பைத் தேடி தந்தது. இவர் ஒரு நடிகை மட்டுமில்லாமல் பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார்.
(2 / 6)
இந்தியாவின் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் ஒரு ஜாட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பி.ஆர் சௌத்ரி இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தார். சண்டிகரில் உள்ள செயின்ட் சோல்ஜர் இன்டர்நேஷனல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார்.
(3 / 6)
பஞ்சாபின் தேரா பாசியில் உள்ள தேசிய பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பல் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
(4 / 6)
சிறந்த மாடல் அழகியாக வலம் வந்த மீனாட்சி மாநில அளவிலான நீச்சல் மற்றும் பூப்பந்து வீராங்கனை ஆவார். இவர் பல போட்டிகளில் விளையாடி தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
(5 / 6)
இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார், அங்கு அவர் ஃபெமினா மிஸ் இந்தியா கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 ஆக முடிசூட்டப்பட்டார். இதன் பின்னரே மாடல் அழகியாக பணியாற்றினார்.
மற்ற கேலரிக்கள்