Ugadi 2023 Traditional Foods: உகாதி பண்டிகை சிறப்பு உணவுகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ugadi 2023 Traditional Foods: உகாதி பண்டிகை சிறப்பு உணவுகள்

Ugadi 2023 Traditional Foods: உகாதி பண்டிகை சிறப்பு உணவுகள்

Mar 22, 2023 05:50 AM IST I Jayachandran
Mar 22, 2023 05:50 AM , IST

தெலுங்கு வருட உகாதி வந்துவிட்டது. இந்த பண்டிகையில் சில பாரம்பரிய உணவுகளை செய்து அதன் சுவைகளை அனுபவிக்க வேண்டும். இந்த உகாதி தினத்தில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மக்கள் அனுபவிக்கும் உணவுகளை பார்ப்போம்.

உகாதி பச்சடி: உகாதி பச்சடி உகாதி பண்டிகையன்று சாப்பிட வேண்டும். இனிப்பு, புளிப்பு, காரமான, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு வகையான சுவை கொண்டது. ஒவ்வொரு சுவையும் ஒரு நபர் வாழ்க்கையில் அனுபவிக்கும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கிறது.

(1 / 6)

பொப்பாட்டு, பொலேலு, ஹோலிகே, உப்பட்டு அல்லது போளி: பொப்பாட்டு என்பது வெல்லம், தேங்காய் அல்லது உளுந்து மாவு நிரப்பப்பட்ட பரோட்டா போன்ற உணவு. இது உகாதி பண்டிகையின் போது ஒரு பிரபலமான உணவாகும். பெரும்பாலும் நெய் அல்லது பாலுடன் பரிமாறப்படுகிறது. நம்ம ஊர் போளிதான் இது!

(2 / 6)

புளிஹோரா: இந்துக்கள் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை, மங்கள நிகழ்ச்சிகளுக்கும் புளி கூழ் செய்து சாதத்தில் கலந்து புளிஹோரா சாப்பிடுவார்கள். நம்ம ஊரில் இது புளியோதரை.

(3 / 6)

ஒப்பாட்டு சாரு: இது சமையலில் எஞ்சியிருக்கும் பூரணத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் காரமான சூப். இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

(4 / 6)

மாம்பழ பச்சடி: மாம்பழ பச்சடி என்பது பழுத்த மாம்பழம், வெல்லம் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு கெட்டியான சட்னி. இது மாம்பழ சீசனில் ஒரு பிரபலமான உணவாகும், இது சாதத்துடன் ஒரு பக்க உணவாக பரிமாறப்படுகிறது. 

(5 / 6)

பிசி பேளே பாத்: பிசி பேளே பாத் என்பது காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு காரமான சாத வகையாகும். பிசி என்றால் கன்னடத்தில் சூடான என்று அர்த்தம். இது கர்நாடகாவில் பிரபலமான உணவு. வடகம், காரா பூந்தி கலந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்