TVK Vijay: 'Say no to drugs' அதிமுக பிரச்சாரத்தை மேடையில் உறுதி மொழி ஆக்கிய விஜய்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tvk Vijay: 'Say No To Drugs' அதிமுக பிரச்சாரத்தை மேடையில் உறுதி மொழி ஆக்கிய விஜய்!

TVK Vijay: 'Say no to drugs' அதிமுக பிரச்சாரத்தை மேடையில் உறுதி மொழி ஆக்கிய விஜய்!

Published Jun 28, 2024 11:14 AM IST Pandeeswari Gurusamy
Published Jun 28, 2024 11:14 AM IST

  • 'Say no to drugs' : அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்குமே அச்சமாக தான் இருக்கிறது. போதை பொருளை தடுக்க ஆளும் அரசு தவறியது என பேச நான் வரவில்லை. அதற்கான மேடை இதுவும் இல்லை. நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். 'Say No to temporary Pleasure and Say no to drugs' ” என்றார் விஜய்.

நடப்பாண்டின் 10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (ஜூன் 28)  காலை சென்னையில் தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

(1 / 7)

நீண்ட நேரமாக விஜய் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் வெள்ளை சட்டையில் அசத்தலான என்ட்ரி கொடுத்தார். தனக்கு மரியாதை கொடுத்த அனைவரையும் பாசமாக அமருங்கள் என சொல்லி அமர வைத்தார். 

(2 / 7)

நாங்கு நேரியில் சாதிய வன்முறையைக் கடந்து 12ம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவன் சின்னத்துரையுடன் தவெக தலைர் விஜய் அமர்ந்தார். 

(3 / 7)

விழாவில் பேசத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். உங்களை எல்லோரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும். இன்று எனக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் மாணவ மாணவிகள் தான் என்றார்

(4 / 7)

எல்லாத் துறையும் நல்ல துறை தான் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை முழு ஈடுபாடுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் பொறியாளர்கள் உள்ளனர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நல்ல விஷயங்களை பேசுவதை தவிர வேறு என்ன பேசுவது. தமிழ்நாட்டிற்கு தேவை நல்ல தலைவர்கள் தான் அரசியல் ரீதியாக மட்டுமல்ல துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பது போல் அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும் என்றார்

(5 / 7)

படிக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடுங்கள். நாளிதழ் படியுங்கள். எல்லாமே பாருங்கள். உண்மை எது பொய் எது என தெரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டாலே ஒரு சில அரசியல் கட்சி செய்யும் பொய்யான பிரச்சாரங்கள் நம்பாமல் இருக்கலாம். இது தெரிந்து கொண்டாலே ஒரு சிறந்த அரசியல் எதுவுமே இருக்க முடியாது.

(6 / 7)

உங்களின் அடையாளத்தை இழக்க வேண்டாம். போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பெற்றோர், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்குமே அச்சமாக தான் இருக்கிறது. போதை பொருளை தடுக்க ஆளும் அரசு தவறியது என பேச நான் வரவில்லை. அதற்கான மேடை இதுவும் இல்லை. நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். 'Say No to temporary Pleasure and Say no to drugs' ” என்றார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்