TVK Vijay vs MK Stalin: ‘அன்று எதிர்ப்பு! இன்று ஆதரவா?’ பரந்தூரில் திமுக அரசுக்கு எதிராக விஜய் பேசியது என்ன?
- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இதோ!
- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இதோ!
(1 / 8)
“ராகுல் என்ற சின்ன பையன் பேசியதை பார்த்து பரந்தூர் வந்து உள்ளேன். அந்த குழந்தையின் பேச்சு எனது மனதை ஏதோ செய்துவிட்டது. உங்கள் எல்லோர் உடனும் தொடர்ந்து நிற்பேன்.”
(2 / 8)
“ஏகனாபுரம் திடலில்தான் எல்லோரையும் சந்திக்க நினைத்தேன். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை. மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன்”
(3 / 8)
“நம்மை ஆளும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது”
(4 / 8)
“இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து வைத்து உள்ளார்கள்”
(5 / 8)
“ஏர்போர்ட்டே வரக்கூடாதுனு நான் சொல்ல, இந்த இடத்தில் வரக்கூடாதுனு சொல்றன். இதை நான் சொல்லவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரான்னு சொல்லுவாங்க”
(6 / 8)
“விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் கேட்டுக் கொள்கிறேன்”
(7 / 8)
“நீங்கள் நாடகம் ஆடுவதையும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு, அதுசரி நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே”
மற்ற கேலரிக்கள்