Tummy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!
- Tummy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!
- Tummy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!
(1 / 9)
உடல் எடையை குறைக்க சீரகத்தண்ணீர் - ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்கவைத்து அல்லது கொதித்த தண்ணீரில் சீரகத்தை மூடிவைத்து அல்லது ஓரிரவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து என எப்படி வேண்டுமானாலும், சீரகத்தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
(2 / 9)
நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு வெந்தய தண்ணீர் - வெந்தயத்தை ஓரிரவு ஊறவைத்து அந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும். இன்ஸ்டன்ட்டாக தண்ணீருடன் வெந்தயத்தை கொதிக்க வைத்து, சிட்டிகை கல்லுப்பு அல்லது இந்துப்பு சேர்த்தும் பருகலாம். ஊறவைத்து பருகும்போது நன்மைகள் பன்மடங்கு கிட்டும்.
(3 / 9)
தைராய்ட்டை தடுக்கும் வரமல்லி தண்ணீர் - தைராய்ட் பிரச்னையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு வரமல்லி விதைகளை ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் வடிகட்டி அதை பருகவேண்டும். உடனடி பானமாக தண்ணீரில் சுக்குடன் கொதிக்கவைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்தும் பருகலாம். ஆனால், ஊறவைத்து பருவதில்தான் ஆற்றல் அதிகம்.
(4 / 9)
பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு பட்டை தண்ணீர் - லவங்கப்பட்டையை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வடிகட்டி, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகிவந்தால் உங்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்னைகள் குணமாகி கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
(5 / 9)
மாதவிடாய் பிரச்னைகளுக்கு சோம்பு தண்ணீர் - ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதை வடிகட்டி அதில் தேன் கலந்து பருகினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும்.
(6 / 9)
கொழுப்பை கரைக்கும் பூண்டு தண்ணீர் - கால் லிட்டர் தண்ணீரில் 10 பல் பூண்டை தட்டிப்போட்டு, அது பாதியாக கொதிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் வடிகட்டி அதில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து பருகினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்தோடும்.
(7 / 9)
முகப்பருக்களை முற்றிலும் நீக்கும் மஞ்சள் தண்ணீர் - தண்ணீரை சூடாக்கி அதில் மஞ்சள் தூளை கலந்து பருகினால், அது உங்கள் முகத்தில் உள்ள பருக்களை முற்றிலும் நீக்கும்.
(8 / 9)
ஒற்றைத்தலைவலியைப் போக்கும் இந்துப்பு தண்ணீர் - சூடான தண்ணீரில் பிங்க் நிற இந்துப்பை கலந்து பருகினால், அது உங்களின் ஒற்றைத்தலைவலியைப்போக்கும். அதனுடன் உடலில் தேங்கியுள்ள மலத்தையும் உடனடியாக வெளியேற்றி மலச்சிக்கலையும் போக்கும்.
மற்ற கேலரிக்கள்