‘சுகர் பேபி பாடலில் செம ஸ்வீட்டாக தோன்றிய த்ரிஷா’: வெளியான தக் லைஃப் படத்தின் 2ஆம் பாடல் - கலக்கல் படங்கள்!
- 'கள்ளம் உள்ள நெஞ்சு, காதல் என்ற நஞ்சு, கண்ணை மூடிக்கொண்டு, என்னை மட்டும் கொஞ்சு’ என சுகர் பேபி பாடலில் வரும் பாடல் வரிகளும் இளைஞர்களை செம கிக் ஏற்றுகிறது
- 'கள்ளம் உள்ள நெஞ்சு, காதல் என்ற நஞ்சு, கண்ணை மூடிக்கொண்டு, என்னை மட்டும் கொஞ்சு’ என சுகர் பேபி பாடலில் வரும் பாடல் வரிகளும் இளைஞர்களை செம கிக் ஏற்றுகிறது
(1 / 6)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் (Thug Life) படத்தின் 2ஆவது பாடலான சுகர் பேபி(Sugar Baby) லிரிக் வீடியோ வெளியானது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்த படம், தக் லைஃப்.
நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் பல கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து ‘’தக் லைஃப்'' திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் முதல் பாடலான ஜிங்கு ஜிங்குச்சா பாடலும் வெளியாகி வைரலானது.
(2 / 6)
அண்மையில் தக் லைஃப் படத்தின் படக்குழு வெளியிட்ட டிரெய்லர் பலரையும் பரவசப்படுத்தியது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘சுகர் பேபி’ பாடல் வெளியாகி இருக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கூட்டணி:
'தக் லைஃப்’ படத்தின்மூலம் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, ‘நாயகன்’ படம் உள்ளது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகிவரும் ‘தக் லைஃப்’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(3 / 6)
டைட்டில் வீடியோ ஏற்படுத்திய எதிர்பார்ப்பு:
'தக் லைஃப்’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில், ஒரு வறண்ட புழுதி நிரம்பிய நிலத்தில் ஒருவர் நிற்கிறார். அவர் தன்னை ஒரு கிராமிய உடையில் மூடியிருக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தத் தயாராக ஐந்து பேர் தூரத்தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி நிற்கிறார்கள். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன் அவரின் முகத்தைக் கேமரா காட்டுகிறது.
ஐந்து பேர் சேர்ந்து அவரை அடிக்க நெருங்கியதும், அவர் தனது முகத்தை மூடியிருந்த துணியை நீக்கி, ஒரு தற்காப்புக் கலை நிலையில் சண்டையிடத் தயாராகிறார். பின்னர், தன்னைத் தாக்க நினைப்பவர்களையும் கீழே விழ வைக்கிறார். அதன்பின் அவர் மீண்டும் தனது மேலங்கியை அணிந்து கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார். அப்போது ‘’என்பேர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்'' எனச் சொல்கிறார். மேலும் அவர் தன்னை கிரிமினல் எனப் பிறர் சொல்வதாகக் கூறுகிறார். படத்தின் தலைப்பு 'தக் லைஃப்' என்று வெளியிடப்படுகிறது.
(4 / 6)
‘’தக் லைஃப்'' படத்தில் சிம்பு:
இப்படத்தில் சிம்பு நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தக் லைஃப் படத்தின் சமீபத்திய டிரெய்லரில் ‘நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்’ என சிம்பு சொல்லும்போது ஆகட்டும், கமல்ஹாசனுடன் சண்டைபோடும்போது ஆகட்டும் எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு தனியாக மிளிர்ந்தார்.
(5 / 6)
சுகர் பேபியாக சூடேற்றும் த்ரிஷா:
தக் லைஃப் படத்தின் இரண்டாம் பாடலான சுகர் பேபி பாடலில் நடிகை த்ரிஷா செம கிளாமராக இருக்கிறார். பாடல் வரிகளை சிவா ஆனந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து எழுதியிருக்கின்றனர்.
’என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டிக் கிடக்கு,
இன்னும் என்ன வேணும் உனக்கு,
சொர்க்கம் இங்கு இருக்கு,
கள்ளம் உள்ள நெஞ்சு,
காதல் என்ற நஞ்சு,
கண்ணை மூடிக்கொண்டு,
என்னை மட்டும் கொஞ்சு’ என சுகர் பேபி பாடலில் வரும் பாடல் வரிகளும் இளைஞர்களை செம கிக் ஏற்றுகிறது.
மற்ற கேலரிக்கள்