Sani To Poorattathi Transit: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பயணம்.. கிள்ளி கொடுத்த ராசியினருக்கு இனி அள்ளிக்கொடுப்பார்
- Sani To Poorattathi Transit: சனி பகவான், கும்பராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் புலம்பெயர்வதால் நன்மை பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
- Sani To Poorattathi Transit: சனி பகவான், கும்பராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் புலம்பெயர்வதால் நன்மை பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
Lord Sani Star Transit: ஜோதிடத்தில் சனீஸ்வரன் மிக மிக மெதுவாக நகரக் கூடிய கிரகம் ஆகும். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு ராசியினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ப பலன்களைக் கொடுத்துக்கொண்டு நகர்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின், சனி பகவான், கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த காலத்தில் ஏற்படும் சிறு சிறு நகர்வுகள் கூட, ஒவ்வொரு ராசியிலும் பின்விளைவுகளை உண்டாக்கும்.
(2 / 6)
சனி பகவான் கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி, மாலை 3:55 மணிக்கு நட்சத்திர மாற்றம் அடைந்து செயல்பட்டு இருக்கிறார். பொதுவாக பூரட்டாதி நட்சத்திரத்தில் ஆளுமை செலுத்துபவராக குரு பகவான் இருக்கிறார். இந்நிலையில் குரு பகவானின், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லதிர்ஷ்டம் பெற்றவர்கள்.ஏனெனில் சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகும்போது அதன் தாக்கம், ஒவ்வொரு ராசியிலும் காணப்படுகிறது.தொழில் முனைவோருக்கு எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். அப்படி பூரட்டாதி நட்சத்திரத்தில் டிராவல் செய்யும் சனியினால், அதிக நன்மைகளைப் பெறும் ராசிகள் குறித்துக் காணலாம்.
(3 / 6)
மேஷம்:சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வதால், இந்த ராசியினருக்கு எண்ணற்ற சுப பலன்கள் கிடைக்கின்றன. பணிப் பாதுகாப்பு இல்லாமல் மேஷ ராசியினர் இருந்தால், இந்த காலகட்டத்தில் நல்ல நிறுவனத்தின் வேலையில் போய் அமர்வீர்கள். தொழில் முனைவோருக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். இதுவரை பணியில் இருந்த சிக்கல்கள், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வீரமும் விவேகமும் கூடும். உங்களிடம் கடன் வாங்கி தராமல் இழுத்தடிக்கும் நபர்கள் இந்த காலத்தில் தருவர். நாட்டுப்பற்று அதிகரிக்கும். பெண்களால் ஆதயாம் பெறுவீர்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பின், பொறுமையிழந்து கைவிட்ட உங்களின் முயற்சிகள் மூலம் பணவரவு கிடைக்கும்.
(4 / 6)
கும்பம்: இத்தனை நாட்களாக கும்ப ராசியினரை வைத்து செய்த சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வதால், இனிமேல் நல்லது செய்வார். திருமணம் நடக்காமல் இருந்த கும்ப ராசியினருக்கு, திருமணம் நடக்கும். உங்களின் தலைமைப் பண்பு அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் தீரும். இத்தனை நாட்களாக சமூகத்தில் கெட்டுப்போன உங்களின் பெயர், நல்ல விதமாக மாறும். பார்ட்னர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவுடனான அன்பு அதிகரிக்கும். உங்களைத் தவறாக நினைத்துக்கொண்டு விட்டு ஒதுங்கிய உறவுகள், உங்களின் உண்மையான நல்ல பண்புகளைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்துசேர்வர்.
(5 / 6)
துலாம்: சனி பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் சென்று இருப்பதால், இந்த காலத்தில் சாதகமான பலன்களை துலாம் ராசியினர் பெறுவர். குழந்தையில்லாமல் தவித்து வந்த துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் குழந்தை பிறக்கும். இத்தனை நாட்களாக, மனதளவில் குழப்பமான சூழலில் இருந்த துலாம் ராசியினருக்கு மனத்தெளிவு கிட்டும். வணிகம் செய்யும் நபர்களுக்கு மந்தமாக இருந்த தொழில் சுறுசுறுப்பாக லாபம் ஈட்டுவீர்கள். சமூகத்தில் பாஸிடிவ் ஆன சூழல் உண்டாகும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்