Train Your Brain : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வேண்டுமா? அதற்கு இந்த பயிற்சிகள் கொடுங்கள்!
- Train Your Brain : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வேண்டுமா? அதற்கு இந்த பயிற்சிகள் கொடுங்கள்!
- Train Your Brain : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வேண்டுமா? அதற்கு இந்த பயிற்சிகள் கொடுங்கள்!
(1 / 11)
உங்கள் குழந்தைகளின் மூளைக்கு பயிற்சி கொடுத்தால் அதை பல மடங்கு அதிகம் செயல்படவைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான். மூளையின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்.
(2 / 11)
அன்றாட வாசிப்பு - எப்போதும், புத்தகங்கள் அல்லது கட்டுரைகள், செய்தித்தாள்கள் அல்லது வார இதழ்கள் என எதையாவது படித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் படிக்கும்போது, அது உங்களின் மனதை தூண்டும். உங்களுக்கு தேவையான புதிய வார்த்தைகளை அதிகரிக்கும். உங்களின் எழுத்து திறனை அதிகரிக்கும். உங்கள் வாதங்களை அர்த்தமுள்ளதாக்கும். உங்களின் உரையாடல்களை சுவாரஸ்யமாக்கும்.
(3 / 11)
விளையாட்டு மற்றும் பசில்கள் - கிராஸ் பேர்ட் பசில், சுடோக்கு, செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் மற்றும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கும். இதனால் உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்படையும்.
(4 / 11)
புதிய திறனை கற்றல் - நீங்கள் புதிய ஹாபிக்கள் அல்லது திறனகளை தேர்ந்தெடுத்து அவற்றை பழக்கவேண்டும். அது ஒரு இசைக்கருவியை இசைப்பதாகட்டும் அல்லது புதிய மொழியை கற்பதாகட்டும் அல்லது புதிய உணவை கற்பதாகட்டும் என ஏதேனும் புதிதாக ஒன்றை நீங்கள் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். இது உங்கள் மூளையின் பல்வேறு பகுதிகளையும் தூண்டும். இதனால், உங்கள் மூளையின் நெகிழ்திறன் அதிகரிக்கும்.
(5 / 11)
வழக்கமான உடற்பயிற்சி - வழக்கமாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, அது உங்கள் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும். இதனால், உங்கள் மூளையில் புதிய செல்கள் உருவாகும். எனவே வாரத்தில் பெரும்பாலான நாட்கள் அரை மணி நேர உடற்பயிற்சி என்பதை கட்டாயமாக்குங்கள்.
(6 / 11)
சமூகத்துடன் தொடர்பில் இருங்கள் - பலமான உறவுகளை பேணுங்கள், சமூகத்துடன் தொடர்பில் இருங்கள். அனைவருடனும் பேசுவது உங்களின் மனஅழுத்தத்தைப் போக்கும். உங்கள் மூளையை அது எதிர்மறையான பாதிக்காது. உங்கள் மூளைக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுத்து, உங்களை உற்சாகமாக்கும்.
(7 / 11)
தியானம் மற்றும் மனநிறைவு - மனநிறைவு மற்றும் தியானம் உங்களின் மன்அழுத்ததை குறைக்கும். உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும். உங்களின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
(8 / 11)
போதிய உறக்கம் தேவை - நீங்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறங்குவதை உறுதிப்படுத்துங்கள். இரவில் உறங்குவதுதான் நல்லது. நினைவாற்றலை ஒருங்கிணைக்க இரவு உறக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. அதுதான் உங்கள் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது.
(9 / 11)
உங்கள் நினைவாற்றலுக்கு சவால் - பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பயிற்சி எடுங்கள். எண்கள், பட்டியல் இவற்றையெல்லாம் எழுதாமல் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களின் நினைவாற்றல் திறனை அதிகரிக்க நிமோனிக் கருவிகளை பயன்படுத்துங்கள். மகிழ்சியான கடந்த காலங்களை அசைபோடுங்கள். மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், நினைவுகளும் உங்களை உற்சாக்கப்படுத்தும். நினைவாற்றலும் அதிகரிக்கும்.
(10 / 11)
மனக்கணக்கு - கால்குலேட்டர், பேப்பரை பயன்படுத்தாமல், கணக்குகளை மனக்கணக்காகவே செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களின் மன சுறுசுறுப்பு மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்க உதவும்.
மற்ற கேலரிக்கள்