ToxicTheMovie: ‘காய்கள மறுபடியும் அடுக்குங்க.. வர்றவன் கேங்ஸ்டர் இல்ல.. மான்ஸ்டர்..’ - யாஷின் மாஸ் லுக்!
ToxicTheMovie: அம்பானி மகன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள தன் மனைவியுடன் வந்த யாஷ்! - யாஷின் மாஸ் லுக்!
(1 / 7)
கன்னட சினிமாவில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
தாயின் ஆணையை நிறைவேற்ற, ஒரு சிறுவன் கேங்ஸ்டராக மாறும் பயணத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படம், மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
(2 / 7)
இந்த வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த பாகமும் மக்களிடம் பம்பர் ஹிட் அடித்து 1000 கோடியை தாண்டி வசூல் செய்தது. இந்த இரண்டு பாகங்களில் நடித்ததின் வழியாக, பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தார் இந்தப்படத்தின் கதாநாயகன் யாஷ்.
(3 / 7)
ஆனால் இந்த படத்திற்கு பிறகு, அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்தான அறிவிப்பை வெளியிடவே இல்லை. இதனால் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் படம் குறித்தான கேள்விகளே கேட்கப்பட்டது. ஆனால், எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்ற ரீதியில் கடந்து சென்றார் யாஷ்.
(4 / 7)
இந்த நிலையில், அண்மையில், யாஷின் 19 வது படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, யாஷின் அடுத்தப்படத்திற்கு டாக்ஸிக் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற கேலரிக்கள்