வரப்போகுது லாங் லீவ்! டூர் போக சரியான இடம் இதோ! தேனி மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு பரீட்சை நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் தொடர் விடுமுறை வரப்போகிறது. குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல திட்டமிட வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு பரீட்சை நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் தொடர் விடுமுறை வரப்போகிறது. குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல திட்டமிட வேண்டும்.
(1 / 8)
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள அருமையான மாவட்டம் தான் தேனி, இப்பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இயற்கையான மலைகளும், அருவிகளும், ஆறுகளும் உள்ளன. இது குழந்தைகளோடு சென்று வர ஏதுவான ஒரு இடமாகும். ஆனால் ஆறு மற்றும் அருவிகளில் குளிப்பதற்கு முன் குளிக்க அனுமதி இருக்கிறதா எனப் பார்த்து பின் செல்வது கட்டாயம். தேனியில் உள்ள ஒரு சில இடங்களை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். (Indian Rail Info )
(2 / 8)
போடி மெட்டு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தேனி மாவட்டத்தில், கேரள எல்லைக்கு அருகில் உள்ள ஒரு பகுதி ஆகும். போடிநாயக்கனூர் செல்லும் வழியில் பூப்பாறையில் இருந்து 10 கி.மீ தொலைவில் மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 85 ன் ஓரத்தில் உள்ளது. (Wikipedia)
(3 / 8)
குரங்கணி மற்றும் டாப் ஸ்டேஷன்குரங்கணி மேற்குத் தொடர்ச்சி மலையில் 400 அடி-6500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கொழுக்குமலை உலகிலேயே மிக உயரமான தேயிலைத் தோட்டம். இது குரங்கணியின் மேல் செங்குத்தான விளிம்பில் அமைந்துள்ளது குரங்கணி மண்டலம் முழுவதும் பல்லுயிர் பெருக்கத்தின் களஞ்சியமாக உள்ளது.(Theni District)
(4 / 8)
மேகமலைமேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இங்கு தேயிலை, ஏலம் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேகமலை, மணலாறு, மகாராஜா மெட்டு, தேயிலை மலைப்பண்ணைத் தோட்டங்கள் போன்ற பகுதிகளை காணலாம்.(Tamilnadu Tourism)
(5 / 8)
வைகை அணைஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையைச் சுற்றி மிக அழகான பூங்கா உள்ளது. இப்பூங்காவில் சிறுவா்கள் விளையாட சிறுவா் இரயில் உட்பட ஒரு தனிப்பகுதி இருக்கின்றது. இத்தலத்தை இம்மாவட்ட மக்கள் ” சிறிய பிருந்தாவனம்” என அழைக்கப்படுகிறது.(Wikipedia)
(6 / 8)
சுருளி அருவிபெண்களும் தனித்தனியே நீராடும் வசதி இருக்கிறது.இளங்கோ அடிகளார் தமது காப்பியமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். இங்கு இஸ்லாமியா்கள் வணங்கும் தா்காவும், சுருளி வேலப்பா் கோயிலும் அருகாமையில் அமைந்துள்ளது.(Tamilnadu Tourism)
(7 / 8)
மேகமலை அருவி ( சின்ன சுருளி )இந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும் அழைக்கப்படுகிறார்கள்(Theni District)
மற்ற கேலரிக்கள்