Cooking Tips: இல்லத்தரசிகளுக்காக சண்டே ஸ்பெஷல் சமையல் டிப்ஸ் இதோ..!
- இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும் சூப்பரான சில சமையல் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும் சூப்பரான சில சமையல் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
(2 / 7)
சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும்.
(3 / 7)
பிரிஜ்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில், ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி, கட்டியானவுடன் குழந்தைகளுக்கு ஜூசுடன் கலந்து கொடுத்தால் அவர்கள் விரும்பி குடிப்பார்கள்.
(4 / 7)
பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
(5 / 7)
தயிர் வடைக்கு, உளுந்தம் பருப்புடன், ஆறு முந்திரி பருப்பை சேர்த்து ஊறவைத்து அரக்கவும். இந்த மாவில் வடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
(6 / 7)
ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்