Top 8 Parenting Tips : குழந்தைகள் எப்படி நஞ்சு நபர்களை அடையாளம் காண்பார்கள்; அதற்கு பெற்றோர் இந்த 8 வழிகளில் உதவலாம்!
- Top 8 Parenting Tips : குழந்தைகள் எப்படி நஞ்சு நபர்களை அடையாளம் காண்பார்கள்; அதற்கு பெற்றோர் இந்த 8 வழிகளில் உதவலாம்!
- Top 8 Parenting Tips : குழந்தைகள் எப்படி நஞ்சு நபர்களை அடையாளம் காண்பார்கள்; அதற்கு பெற்றோர் இந்த 8 வழிகளில் உதவலாம்!
(1 / 8)
அவர்களின் எல்லைகள் குறித்து அறிவுறுத்துங்கள் - உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட எல்லைகள் குறித்து நீங்கள் விளக்கும்போது, அது அவர்களுக்கு யாரேனும் அவர்களின் எல்லைகளை கடந்து சென்றால் அதை அவர்கள் எளிதில் கண்டுகொள்ள உதவும். எனவே அவர்களுக்கான இடம் மற்றும் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பதை ஊக்குவிக்கவேண்டும். அவர்களுக்கு எப்போது ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
(2 / 8)
நல்ல மற்றும் கெட்ட நடத்தைகள் குறித்து பேசுங்கள் - உங்கள் குழந்தைகள் சரிக்கும் தவறுக்குமான வித்யாசத்தை புரிந்துகொள்ள உதவ வேண்டும். அவர்களுக்கு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும். உங்களிடம் பொய் உரைப்பது அல்லது துன்புறுத்துதல் குணம் குறித்து நீங்கள் விளக்கிவிட்டால் போதும், இது அவர்களை முன்னரே நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவும். இவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்று கூறவும் முடியாது. நல்லவர்கள் எனவும் சொல்ல முடியாது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுப்பதுதான ஒரே வழி.
(3 / 8)
அவர்களின் உள்ளுணர்வுகளை நம்ப ஊக்குவிக்கவேண்டும் - உள்ளுணர்வுகள் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் ஆகும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை நம்ப வலியுறுத்துங்கள். அவர்கள் சில விஷயங்கள் சரியில்லை என்று உணரும்போது, அவர்களின் உள்ளுணர்வுகள் அவர்களுக்கு வழிகாட்டட்டும். அவர்களுக்கு உகந்ததல்லாத சூழல்களில் இருந்து அவர்கள் தங்களை நீக்கிக்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
(4 / 8)
உண்மை சம்பவங்கள் - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உங்கள் குழந்தைகள் சில கடுமையான சூழல்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தங்கள் வயதையொத்த மற்றவர்களிடம் இருந்து வரும் அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அவர்கள் சில கடும் உரையாடல்களுக்கு எப்படி பதில் கொடுக்கவேண்டும் என்றும், அவர்களின் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்துங்கள். அவர்கள் மற்றவர்களை மதிப்பிடும் தன்மையை அதிகரிக்க நீங்கள் அதைச் செய்து அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
(5 / 8)
திறந்த வெளிப்படையான உரையாடல் - திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடல் மற்றும் நம்பத்தகுந்த சூழலை உருவாக்குவது, உங்கள் குழந்தைகளுக்கு எதையும் பாதுகாப்பாக உரையாட உதவும். அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும். எப்போது அவர்கள் உங்களை எந்த ஒரு விஷயத்துக்கும் வழிகாட்ட அணுகுகிறார்களா என்பது குறித்து சோதித்துக்கொள்ளுங்கள்.
(6 / 8)
ஒரு விஷயத்தை முற்றிலும் மாற்றுவது - உங்கள் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை அப்படியே மாற்றும் விதத்தை அறிந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு ஒருவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குற்றவுணர்வை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் உண்மையான நபராக இருப்பதற்கு வாக்குறுதிகள் மிகவும் அவசியம் மற்றும் நீங்கள் எவ்வாறு பதில் கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். ஆனால் ஒருவர் உங்களை மாற்ற விரும்புவதை எப்படி தவிர்க்கவேண்டும் என்றும், நல்ல மாற்றம் என்றால் ஏற்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
(7 / 8)
நம்பிக்கையான பெரியவர்களை கண்டுகொள்வது - உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையான பெரியவர்களை அடையாளம் காண்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அவர்கள் ஆசிரியர், உறவினர் அல்லது குடும்ப நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பவர்கள் யார் என்பதை அவர்கள் அடையாளம் காண கற்றுக்கொடுங்கள்.
மற்ற கேலரிக்கள்