வெப்பத்தை தணிப்பது முதல் விந்து எண்ணிக்கையை பெருக்குவது வரை.. மருதாணியின் மருத்துவ பயன்கள் இதோ..!
- நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய மருதாணியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மருதாணியில் உள்ள மருத்துவ பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிவோம்.
- நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய மருதாணியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மருதாணியில் உள்ள மருத்துவ பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிவோம்.
(1 / 6)
மருதாணியின் இலை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி, பித்தவெடிப்புகள் போன்ற பிரச்னைகளுக்கு மருதாணி நல்ல தீர்வைத் தரும்.
(2 / 6)
மருதாணி மிகவும் குளிர்ச்சியானது, உடல்சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. மருதாணி இலைகளை அரைத்து கைகளுக்கு வைத்தால் உடல் வெப்பம் தணியும்.சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.
(3 / 6)
மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து உள்ளங்காலில் ஆணி பட்ட இடத்தில் பூசினால் ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்.
(4 / 6)
மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை, கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை, கால் எரிச்சல் உடனே சரியாகும்.
(5 / 6)
மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி. மருதாணி இலையை நீரில் ஊறவைத்து காயம்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.
மற்ற கேலரிக்கள்