சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள்.. சச்சினை முந்த கோலி எத்தனை பவுண்டரி அடிக்க வேண்டும் தெரியுமா?
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த டாப் 5 வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம். இந்த லிஸ்டில் இந்திய அணியின் ரன் மெஷின்களான சச்சின் டென்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பிடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான பவுண்டரி வித்தியாசம் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த டாப் 5 வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம். இந்த லிஸ்டில் இந்திய அணியின் ரன் மெஷின்களான சச்சின் டென்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பிடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான பவுண்டரி வித்தியாசம் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது
(1 / 7)
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டென்டுல்கர், விராட் கோலி என இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்(X)
(2 / 7)
சச்சின் டெண்டுல்கர்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்து டாப் இடத்தில் உள்ளார் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர். அவர் தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 664 போட்டிகளில் விளையாடி 4076 பவுண்டரிகளை அடித்துள்ளார்
(3 / 7)
குமார் சங்கக்காரா: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா இந்த லிஸ்டில் இரண்டாவதாக உள்ளார். இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 594 சர்வதேச போட்டிகள் விளையாடி 3015 பவுண்டரிகளை அடித்துள்ளார்(ICC)
(4 / 7)
ரிக்கி பாண்டிங்: இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டனான ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 560 போட்டிகளில் 2781 பவுண்டரிகளை அடித்துள்ளார்(ICC)
(5 / 7)
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார். கோலி இதுவரை 541 சர்வதேச போட்டிகளில் 2693 பவுண்டரிகளை அடித்துள்ளார். கோலிக்கும், சச்சினுக்கும் இடையே உள்ள பவுண்டரி வித்தியாசம் ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. தற்போது வரை 1393 பவுண்டரிகள் சச்சினை விட பின் தங்கியுள்ளார் கோலி(AP)
(6 / 7)
மஹேலா ஜெயவர்தனே: இலங்கை அணியின் மற்றொரு வெற்றிகரமான கேப்டனும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான மஹேலா ஜெயவர்தனா இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 652 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2679 பவுண்டரிகள் அடித்துள்ளார்(X)
மற்ற கேலரிக்கள்