ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான பவுலிங்.. ரன்களை வாரி கொடுத்த வள்ளல்கள்.. டாப் 5 இடத்தில் இந்திய பவுலர்கள்
- ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் முகமது ஷமி. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் தனது கேரியரில் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார்
- ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் முகமது ஷமி. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் தனது கேரியரில் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார்
(1 / 6)
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான ஸ்பெல்கள் வீசிய பவுலர்களில் டாப் 5 இடத்தில் இருப்பது யாரெல்லாம், அவர்கள் மோசமான பவுலிங் என்ன என்பதை பார்க்கலாம். முகமது ஷமி மோசமான சாதனை நிகழ்த்துவதில் இருந்து தப்பினார்
(2 / 6)
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய டாப் 5 பவுலர்களில் நான்கு இந்தியர்கள் உள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் இடத்தில் உள்ளார்
(3 / 6)
ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான ஸ்பெல்லைவீசியுள்ளார். ஐபிஎல் 2025இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஆர்ச்சர், எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை
(4 / 6)
மோஹித் சர்மா: வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் 2024இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 73 ரன்கள் விட்டுக்கொடுத்து, எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. அப்போது மோஹித் ஷர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியனார். இந்த சீசனில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடியுள்ளார்
(5 / 6)
பசில் தம்பி: பாசில் தம்பி 2018இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் தனது ஸ்பெல்லில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை
(6 / 6)
யாஷ் தயாள்: வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் 2023இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக எந்த விக்கெட்டும் எடுக்காமல் 69 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தயாள் அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவர் ஆர்சிபி அணியில் விளையாடுகிறார்
மற்ற கேலரிக்கள்