ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள்.. கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர் - டாப் 5 லிஸ்ட்
ஐபிஎல் போட்டிளில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 கேப்டன்களின் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன் விராட் கோலியின் அற்புதமான சாதனையை அவர் முறியடித்துள்ளார்
(1 / 6)
ஐபிஎல் 2025 தொடர் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்ஸர்கள் பறக்க விட்டு சிக்ஸர் மழை பொழிந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தனது அணியை இரண்டாவது முறையாக பைனலுக்கு அழைத்து சென்றார். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் சாதனைகளை நிகழ்த்தவும் தவறவில்லை. அதன்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டனாக மாறியுள்ளார்
(2 / 6)
ஷ்ரேயாஸ் ஐயர்: ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் ஐயர், அதிரடியாக பேட் செய்து கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்து பஞ்சாபை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தார். இதன் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல்லின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டனாக அவர் மாறியுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை 16 போட்டிகளில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார்
(3 / 6)
விராட் கோலி: நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முக்கிய பேட்ஸ்மேனான கோலி, ஐபிஎல் 2016 தொடரில் ஆர்சிபி அணி கேப்டனாக 38 சிக்ஸர்களை அடித்தார். இதுவே ஒரு சீசனில் ஐபிஎல் அணிகளின் கேப்டன் அடித்த சிக்ஸர்களில் அதிகபட்சமாகும்
(4 / 6)
டேவிட் வார்னர்: முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 2016ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு தலைமை தாங்கியபோது வார்னர் 31 சிக்ஸர்களை அடித்தார். அவர் 17 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அத்துடன் இந்த சீசனில் இறுதிப்போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணியை சாம்பியன் ஆக்கினார் வார்னர்
(5 / 6)
எம்எஸ் தோனி: சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கேப்டனாக இருந்தபோது 16 போட்டிகளில் 30 சிக்ஸர்களை அடித்தார்
(6 / 6)
கேஎல் ராகுல்: அதிரடியில் மிரட்ட கூடிய பேட்ஸ்மேனாக இருந்து வரும் கேஎல் ராகும் ஒரே சீசனில் 30 சிக்ஸர்கள் இரண்டு முறை அடித்த சாதனையை படைத்துள்ளார். 2021 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், 2022 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்ட அவர், 30 சிக்ஸர்களை அடித்துள்ளார். ராகுல் இப்போது டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக உள்ளார்
மற்ற கேலரிக்கள்