Top 10 Parenting Tips : ஒரு நல்ல தந்தையாக வேண்டுமா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது இந்த 10 விஷயங்களைத்தான்!
- Top 10 Parenting Tips : ஒரு நல்ல தந்தையாக வேண்டுமா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது இந்த 10 விஷயங்களைத்தான்!
- Top 10 Parenting Tips : ஒரு நல்ல தந்தையாக வேண்டுமா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது இந்த 10 விஷயங்களைத்தான்!
(1 / 10)
பொறுமை - எனது தந்தைக்கு எல்லையற்ற பொறுமை குணம் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். குழந்தைகளுடன் இருக்கும் தந்தைமார்களுக்கு பொறுமை அவசியம் இருக்கவேண்டும். நீங்கள் பொறுமையாக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு விரக்தி, அவசரம் இல்லாமல் வழிகாட்ட வேண்டும். பொறுமையாக கவனிக்கவேண்டும். பொறுமையான தந்தை, தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்றும், மதிக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்வில் அவர்களை கற்கவும், வளரவும் உதவவேண்டும்.
(2 / 10)
விளையாட்டு - எனது தந்தை தினமும் என்னுடன் அதிக நேரம் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் விளையாட்டு பார்ட்னர் அவர்களின் தந்தைதான். நீங்கள் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுப்பதற்கு பதில், அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடவேண்டும். அந்த பரிசுப்பொருட்களைவிட குழந்தைகள் எதிர்காலத்தில் இந்த நினைவுகளைத்தான் அதிகம் நினைவில் வைத்துக்கொள்கிறார்.
(3 / 10)
அலுவலகம் - எனது தந்தை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் நம்பவேண்டாம். எந்த குழந்தையும் தங்கள் தந்தை ஒவ்வொரு நாள் காலையிலும் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் அவர்களுடேனே தந்தை இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாப்புடனும், பத்திரமாகவும் பார்த்துக்கொள்ள எப்போதும் தந்தைகள் பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்.
(4 / 10)
உணர்வு - நான் என் தந்தை எனது உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் ஒரு தந்தை, குழந்தைகளின் உணர்வுகளையும், அனுபவங்களையும் அனுதாபத்துடன் அணுகவேண்டும். குழந்தைகளுக்கு சவுகர்யத்தை கொடுக்கவேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். இந்த ஆழ்ந்த உணர்வு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்கும் உணர்வைத்தரும்.
(5 / 10)
மகிழ்ச்சி - நான் எனது தந்தை என்னை சிரிக்க வைக்கும் தருணத்தை அதிகம் விரும்புகிறேன். உங்கள் தந்தைக்கு உங்களை வெடித்து சிரிக்க வைக்கும் குணங்கள் உள்ளதா? அது உங்கள் குழந்தைகளுக்கு அதிகம் சிரிக்கும் தருணங்களைக் கொடுக்கும். உங்களின் ஒரு ஜோக் உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், இதயத்தை இதமாகவும் மாற்றுகிறது.
(6 / 10)
உற்சாகம் - எனது தந்தைதான் என்னை நன்றாக உற்சாகப்படுத்தவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தந்தையின் ஆதரவை எப்போதும் விரும்புகிறார்கள். அவர்கள் சந்திக்கும் சவால்கள், போட்டிகளில் அவர்களை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு ஆதரவான தந்தை எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்கிறார். அவர்களுக்கு தேவையான ஃபீட்பேக்குகளை வழங்கி, அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் உற்சாகமாக ஈடுபடுகிறார்.
(7 / 10)
ஆதரவு - எனது தந்தை எப்போதும் எனக்காக இருக்கவேண்டும். தங்கள் பெற்றோரிடம் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்ப்பது நம்பத்தன்மை ஒன்றை மட்டும்தான். அவர்கள் எப்போதும் தங்கள் தந்தை கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை வரவேண்டும். அவர்களுக்கு தேவைப்படும்போது உடன் நில்லுங்கள். அவர்களுக்கு எப்போதும் உங்கள் இருப்பை உணர்த்துங்கள்.
(8 / 10)
ஆற்றல் - எனது தந்தைக்கு அமானுஷ்ய சக்திகள் இருக்கவேண்டும் என்று நான் என்னுகிறேன். அவரின் கிரியேட்டிவிட்டியும் எங்களை கவர்வதாக இருக்கவேண்டும். ஒரு கிரியேட்டிவான தந்தை, அவரது குழந்தைகளிடம், கற்பனை விளையாட்டுகள் மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் அவர்களை கவர்கிறார்கள். தங்கள் குழந்தைகளிடம் கிரியேட்விட்டியை வளர்த்தெடுக்கும் தந்தை அவர்களின் கற்பனை திறனை வளர்த்தெடுப்பார்கள். அவர்களை அவுட் ஆஃப் பாக்ஸ் சிந்திக்க தூண்டுவார்கள். அவர்களுடன் சேர்ந்து மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குங்கள்.
(9 / 10)
அறிவு - நானும் எனது தந்தையைப்போல் அறிவாளியாவேன். குழந்தைகள் தங்களின் தந்தை தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், அவர்களின் அறிவை வழங்கவேண்டும் என்றும் விரும்கிறார்கள். ஒரு அறிவான தந்தை தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த அறிவுரைகளைக் கொடுக்கிறார்கள். முக்கிய பாடங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். கடின முடிவுகளை கடக்க உதவுவார்கள்.
(10 / 10)
அரவணைப்பு - எனது தந்தை என்னை அதிக முறை அரவணைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன். உணர்வு ரீதியான ஆதரவைக் கொடுக்கும் ஒரு தந்தை, அடிக்கடி அன்பான வார்த்தைகள் பேசவேண்டும். கட்டிப்பிடிக்கவேண்டும். இந்த உடல் ரீதியான நெருக்கம் குழந்தைகளுக்கு தேவையான ஒன்று. குழந்தைகளுக்கு எப்போதும் இதமான நெருக்கம் தேவை. இது அவர்களுக்கு அன்பையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறது.
மற்ற கேலரிக்கள்