Top 10 Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top 10 Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?

Top 10 Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?

Jan 20, 2025 10:16 AM IST Priyadarshini R
Jan 20, 2025 10:16 AM , IST

  • குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன? 

குழந்தைகளிடம் என்ன கூறவேண்டும்? - ஒரு பெற்றோராக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நமது குழந்தைகளிடம் பெரிய பாதிப்புபை ஏற்படுத்துகிறது. நேர்மறை எண்ணங்கள் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. அவர்கள் உணர்வு ரீதியான அறிவாளிகளாவதற்கு உதவுகிறது. உங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாவதற்கு, நீங்கள் அவர்களிடம் இவற்றையெல்லாம் கூற வேண்டும். இது அவர்களின் வெற்றிக்கும் வழிவகுக்கும்.

(1 / 10)

எனக்கு உன்னைப் பிடிக்கும் - இவற்றை பார்த்தால் மிகவும் எளிமையான வார்த்தைகளாக இருக்கும். ஆனால், இதன் பாதிப்பு அதிகம். ஒரு உளவியல் ஆய்வில், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அதிக முறை நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறினால், அவர்களின் மகிழ்சசி அதிகரிப்பதாக தெரிவிக்கிறது. மேலும் அவர்களின் மதிப்பை அவர்கள் உயர்த்திக்கொள்வதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

(2 / 10)

எப்போதும் எனக்கு நீ பெருமை சேர்க்கிறாய்? - உங்கள் குழந்தைகளின் சாதனைகள் குறித்து நீங்கள் பெருமை கொள்ளவேண்டும். அவை எத்தனை பெரிய சாதனைகளாக இருந்தாலோ அல்லது சிறிய சாதனைகளாக இருந்தாலோ கூட போதும். அது மிகவும் பெருமையான ஒன்றுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. உளவியல் ரீதியாக நடந்த ஆய்வுகளில், தங்களின் குழந்தைகளை வாழ்த்திக்கொண்டே இருக்கும்போது, அது அவர்களுக்கு வளர்ச்சி மனநிலையை ஏற்படுத்துவதாக கூறுகிது.

(3 / 10)

உங்கள் குழந்தைகளிடம் ஏன் நன்றி கூறவேண்டும் - நன்றி உரைப்பது, குழந்தைகளுக்கு பாராட்டுகள் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு உதவியதற்கு நன்றி கூறுங்கள். அவர்கள் அவர்களாகவே இருப்பதற்கு நன்றி கூறுங்கள். அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுங்கள். அவர்களை புதிய விஷயங்களை கற்கவும், அவற்றில் இருந்து கற்க அனுமதிக்கவேண்டும். 

(4 / 10)

தவறுகளை ஊக்குவிப்பது சரியா? - தவறுகள் செய்வது வாழ்வின் அங்கம்தான். நீங்கள் தவறுகள் செய்யும்போதுதான் நிறைய கற்கிறீர்கள். தவறுகள் செய்வது அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறது. எனவே அதிகம் கற்றுக்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சிக்க அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு புதிய அனுபவங்களை பெற்றுக்கொடுங்கள். எனவே தவறுகள் செய்தால் அவர்கள் அதிலிருந்து வெளியேற அவர்களுக்கு உதவுங்கள். அது ஒரு கற்றல் பயணம் என உணர்த்துங்கள்.

(5 / 10)

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் - குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகள் குறித்து கேட்கும்போது, அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கும், அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்று பொருள். இந்த கேள்வி குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை வளர்த்தெடுக்க உதவுகிறது.

(6 / 10)

நம்பிக்கை எனும் பேராயுதம் - குழந்தைகளின் திறனில், நம்பிக்கை கொள்வது, அவர்களின் தன்னம்பிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை நீங்கள் நம்புவது, அவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அவர்களை படிப்பிலும் படுசுட்டிகளாக்கச் செய்கிறது. அவர்களின் திறன்கள் மீதான உங்களின் நம்பிக்கையை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் குறிக்கோள்களை அடைய முயற்சி செய்யுங்கள்.

(7 / 10)

உங்கள் மகிழ்ச்சிக்கு காரணம் யார்? - உங்கள் குழந்தையிடம் எப்போது தெரிவியுங்கள், அவர்கள் தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர்கள் என்று, இது அவர்களை மதிப்புமிக்கவர்களாக உணரவைக்கும். பெற்றோரால் மதிக்ககப்படும் குழந்தைகள், அவர்கள் நேர்மறையான எண்ணங்களை வகுத்துக்கொள்கிறார்கள். உணர்வு ரீதியாக அவர்களின் நலனும் மதிக்கத்தக்க வகையில் உள்ளது. அவர்கள் உங்கள் வாழ்வில் கொண்டு வந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள்.

(8 / 10)

குறிப்பறிந்து உதவுவது எப்படி? - உங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்ய எண்ணும்போது, நீங்கள் இந்தக் கேள்வியை அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என அவர்கள் உணர்வார்கள். பெற்றோரின் தலையீடும், ஆதரவும் குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இதனால் அவர்கள் படிப்பு மற்றும் சமூக ரீதியாக முன்னிலையில் இருப்பார்கள். இந்த கேள்வி, குழந்தைகளுக்கு பலத்தைத் தரும், அவர்கள் சோர்வடையவில்லை என்பதை காட்டும்.

(9 / 10)

குழந்தைகளிம் ஏன் இதை கேட்கவேண்டும்? - உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கும்போது, அவர்களுக்கு நீங்கள் உதாரணமாகிறீர்கள். அது அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை உணர்த்துகிறது. அவர்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. அவர்களின் தவறுகளை அவர்கள் உணரவைக்கிறது. எனவே அவர்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கும்போது, அவர்கள் சில நல்ல பாடங்களை கற்கிறார்கள்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்