Himachal Pradesh: சிம்லா முதல் மணாலி வரை! இமாச்சல பிரதேசத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 சுற்றுலா தலங்கள்!
- மணாலி முதல் சிம்லா வரை இமாச்சல பிரதேச மாநிலத்தில் கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் விவரங்கள் இதோ...!
- மணாலி முதல் சிம்லா வரை இமாச்சல பிரதேச மாநிலத்தில் கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் விவரங்கள் இதோ...!
(1 / 11)
இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும், இது மேற்கு இமயமலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் வடக்கில் ஜம்மு & காஷ்மீர், மேற்கில் பஞ்சாப், தெற்கில் ஹரியானா, தென்கிழக்கில் உத்தரபிரதேசம் மற்றும் கிழக்கில் சீனா ஆகியவை எல்லைகளாக உள்ளன.
(2 / 11)
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காசா, ஸ்பிதி நதியின் சமவெளியில் ஒரு அமைதியான இடமாகும். பனியால் மூடப்பட்ட கம்பீரமான மலைகள், வளைந்து நெளிந்து கொப்பளிக்கும் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மற்றும் பச்சை நிறத்தில் சிதறிய திட்டுகளுடன் கூடிய அழகிய தரிசு நிலப்பரப்பு இதன் சிறப்பு
(3 / 11)
பார்வதி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான கசோல் 'இந்தியாவின் ஆம்ஸ்டர்டாம்' என்று அழைக்கப்படுகிறது. மலையேற்றம் செய்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்திற்கு வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.
(4 / 11)
திபெத்திய கலாச்சாரம், இயற்கை மலையேற்றங்கள், பசுமை, பழங்கால கோவில்கள் மற்றும் மடாலயங்கள் ஆகியவற்றிற்காக தர்மசாலாவின் புறநகர் பகுதியில் உள்ள மெக்லியோட்கஞ்ச் பகுதி புகழ்பெற்று விளங்குகிறது.
(5 / 11)
காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் பிர். ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கில் பாராகிளைடிங்கிற்கும் தியானத்திற்கும் பெயர் பெற்ற பிர் பில்லிங் ஒரு பிரபலமான இடமாகும். திபெத்திய சமூக குடியேற்றத்தால் திபெத்திய கலாச்சாரத்தின் தாக்கம் உள்ளது.
(6 / 11)
ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் நீங்கள் காலடி எடுத்து வைக்கும் போது குளிர்ந்த பாலைவனம் மற்றும் பனி மகுடம் சூடிய மலைகளின் மறக்க முடியாத காட்சிகள் உங்களை வரவேற்கும்.
(7 / 11)
கண்கவர் பள்ளத்தாக்குகள், பனி மூடிய மலைகள் மற்றும் ஓக், தேவதாரு மற்றும் பைன் மரங்களின் பசுமையான காடுகளுடன் காட்சி அளிக்கும் மணாலி ஒரு மாயாஜால மலை வாசஸ்தலம்.
(8 / 11)
சிம்லா ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் மற்றும் இந்திய குடும்பங்கள் மற்றும் தேனிலவு செல்வோர் மத்தியில் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். 2200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகரமாக இருந்தது. அழகிய காலனித்துவ கட்டிடக்கலை சான்றுகளை இங்கே அதிகம் காணலாம்.
(9 / 11)
சோலன் மாவட்டத்தில் சண்டிகரில் இருந்து சிம்லா செல்லும் சாலையில் அமைந்துள்ள கசௌலி ஒரு மலைப்பாங்கான கன்டோன்மென்ட் நகரமாகும்,
(10 / 11)
2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஃபாகு, சிம்லாவிலிருந்து 45 நிமிட பயணத்தில் அமைந்துள்ள அமைதியான பனி மூடிய குக்கிராமமாகும். இது ஆப்பிள் தோட்டங்கள், விதைப்பு வயல்கள் மற்றும் பின்னணியில் பனி மூடிய இமயமலைக்கு பெயர் பெற்றது.
மற்ற கேலரிக்கள்