Gold Rate: உலக வரலாற்றில் முதன் முறையாக 70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை! வரலாற்றில் புதிய உச்சம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gold Rate: உலக வரலாற்றில் முதன் முறையாக 70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை! வரலாற்றில் புதிய உச்சம்!

Gold Rate: உலக வரலாற்றில் முதன் முறையாக 70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை! வரலாற்றில் புதிய உச்சம்!

Published Apr 12, 2025 09:48 AM IST Kathiravan V
Published Apr 12, 2025 09:48 AM IST

  • Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்து உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (ஏப்ரல் 12) விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
 சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

(1 / 10)

 முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

(2 / 10)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 12) ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.70,160 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770-க்கு விற்பனையாகிறது.

(3 / 10)

(Pixabay)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 11) ஒரு சவரன் ரூ.69,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,745-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 10)

வெள்ளி விலை இன்று (ஏப்ரல் 10) ஒரு கிராமிற்கு ஒரு ரூபாய் 2 உயர்ந்து ரூ.110.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை ஆகிறது.

(5 / 10)

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.

(6 / 10)

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

(7 / 10)

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

(8 / 10)

ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

(9 / 10)

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

(10 / 10)

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்