TN Weather Update: இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு இதோ..!
- தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 26) எந்தெந்த மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 26) எந்தெந்த மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
(1 / 6)
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(2 / 6)
மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
(3 / 6)
28.07.2024 முதல் 01.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(4 / 6)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
(5 / 6)
சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 -37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்