'ரூ.5,258 கோடி பட்ஜெட்.. பிரசாத விற்பனை மூலம் ரூ.600 கோடி கிடைக்க வாய்ப்பு': திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தகவல்!
- திருமலை திருப்பதியில் 2025-26ஆம் ஆண்டுக்கான ரூ.5,258 கோடி பட்ஜெட்டுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- திருமலை திருப்பதியில் 2025-26ஆம் ஆண்டுக்கான ரூ.5,258 கோடி பட்ஜெட்டுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
(1 / 6)
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை - ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) அறக்கட்டளை வாரியம், 2025-26 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டுக்கு ரூ.5,258.68 கோடி என ஒப்புதல் அளித்துள்ளது என்று வாரியத் தலைவர் பி.ஆர்.நாயுடு மார்ச் 24ஆம் தேதியன்று தெரிவித்தார்.
(File)(2 / 6)
அன்னமய்யா பவனில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். நாயுடு, ''2024-25ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ .5,180 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார். வாரியம் ஒப்புதல் அளித்த பட்ஜெட் புள்ளிவிவரங்களின்படி, டி.டி.டி தனது வருவாயின் பெரும்பகுதியை பக்தர்களின் உண்டியல் (பணப் பெட்டகம்) காணிக்கைகளிலிருந்து ரூ.1,729 கோடி வரை பெறும் என்று எதிர்பார்க்கிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் வங்கி டெபாசிட்களுக்கான வட்டி சுமார் 1,310 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், பிரசாதம் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் 600 கோடி ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனம் டிக்கெட்டுகள் விற்பனை சுமார் 310 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், பக்தர்களின் தலையில் மொட்டை அடித்து பெறப்பட்ட மனித முடியை ஏலம் விடுவதன் மூலம் ரூ .176.5 கோடி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
(PTI File)(3 / 6)
"வருவாய் செலவினங்களின் பெரும்பகுதி, சுமார் 1,774 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் சம்பளமாகச் செல்லும். மூலப்பொருட்கள் வாங்க ரூ.768 கோடியும், பிற முதலீடுகளுக்கு ரூ.800 கோடியும், பல்வேறு பொறியியல் பணிகளுக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார், பி.ஆர்.நாயுடு.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் மற்ற முடிவுகளை விளக்கிய டி.டி.டி தலைவர் பி.ஆர்.நாயுடு, "'கோயில் சமையலறை தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகாபள்ளி, கர்னூல், தர்மாவரம், தலகோனா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு கோயில்களை புனரமைக்க நிதி உதவி வழங்கவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. திருமலையில் உள்ள சில விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகைகளை புனரமைக்க வாரியம் முடிவு செய்துள்ளது’’ கூறியுள்ளார்.
(PTI File)(4 / 6)
மேலும் அவர், ‘’அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்காக முன்னர் ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை ரத்து செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலையில் அனுமதியற்ற மற்றும் உரிமம் பெறாத கடைகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
வெங்கடேஸ்வரரின் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரத்தை முன்பு நடைமுறையில் இருந்ததைப் போல அதிகாலை 5.30 மணிக்கு மீட்டெடுக்க பக்தர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவும் டி.டி.டி வாரியம் முடிவு செய்தது’’என்றார்.
(5 / 6)
மேலும் பி.ஆர். நாயுடு கூறுகையில், ‘’கோயில் சடங்குகளை நடத்துவதில் வாரியத்தை வழிநடத்துவதற்கான ஆலோசனைக் குழுவான ’புதிய ஆகம சலஹா மண்டலியை’ உருவாக்கவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றார், பி.ஆர்.நாயுடு.
( Pixabay)(6 / 6)
அதுமட்டுமின்றி, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு ஆஃப்லைன் தரிசனம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது உட்பட பல முக்கிய தீர்மானங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் நிறைவேற்றியது. கோடங்கல், கரீம்நகர், உபமாக்கா, அனகாபள்ளி, கர்னூல், தர்மாவரம், தலகோனா மற்றும் திருப்பதி (கங்கம்மா கோயில்) ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை புனரமைக்க நிதி உதவி வழங்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
( Pixabay)மற்ற கேலரிக்கள்