வாட்டி வதைக்கும் மார்கழி குளிரில் மூட்டு வலி அதிகமாகுதா?: மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் டிப்ஸ்
- குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்னை அதிகமாக இருக்கும். நீங்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், மூட்டு வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் குறிப்புகளைப் பார்க்கலாம்.
- குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்னை அதிகமாக இருக்கும். நீங்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், மூட்டு வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் குறிப்புகளைப் பார்க்கலாம்.
(1 / 6)
குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை மூட்டு வலியை மோசமாக்கும். சூடான ஆடைகள், கையுறைகள், சாக்ஸ் அணிவதன் மூலம் உங்களை சூடாக வைத்திருங்கள். வெளியில் செல்லும்போது ஜாக்கெட்டுகளை பயன்படுத்துங்கள். இதன்மூலம் மூட்டு வலியில் இருந்து தப்பிக்கலாம்.
(2 / 6)
மூட்டு வலி இருக்கும் பகுதியை ஒரு சூடான பேக் மூலம் தேய்க்கலாம். மூட்டு வலியின் உடனடி நிவாரணத்திற்கு சூடான பேக் அல்லது சூடான துண்டை பயன்படுத்தி ஒத்தடம் வைக்கவும்.
(3 / 6)
உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். நடைபயிற்சி, யோகா, மென்மையான பயிற்சிகளை முயற்சிக்கவும். மூட்டு வலிகளைப் போக்க குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருங்கள்.
(4 / 6)
உங்கள் உணவில் போதுமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். பால், முட்டைக்கோஸ், முழு தானியங்கள் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.
(5 / 6)
மீன், நட்ஸ்கள், இஞ்சி, பெர்ரி போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டு வலியைக் குறைக்க உதவும் இந்த அழற்சி எதிர்ப்பு உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் மூட்டுகளைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் வலி குறையும். அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கிரீம்கள் மூட்டுகளை விடுவிக்கப் பயன்படுத்தப்படலாம்.
மற்ற கேலரிக்கள்