சிம்மத்தில் ஏறும் கேது.. டாப் கியரில் அச்சமின்றி உச்சம் தொடும் மூன்று ராசிகள்.. எப்போது பெயர்ச்சி தெரியுமா?
- சிம்மத்தில் கேதுவின் பெயர்ச்சியால் 3 ராசிகளின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. திடீர் நிதி ஆதாயங்கள் இருக்கும்
- சிம்மத்தில் கேதுவின் பெயர்ச்சியால் 3 ராசிகளின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. திடீர் நிதி ஆதாயங்கள் இருக்கும்
(1 / 6)
வேத சாஸ்திரங்களில், கேது ஒரு பாவம் நிறைந்த கிரகம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், குரு பகவானின் சில குணங்களும் அவரிடம் காணப்படுகின்றன. ராகுவும் கேதுவும் எப்போதும் எதிரெதிர் திசைகளில் நகரும். அதாவது, மற்ற அனைத்து கிரகங்களும் முன்னோக்கி நகர்கின்றன. ஆனால், இந்த இரண்டு கிரகங்களும் பின்னோக்கி நகர்கின்றன. எனவே, கேது தனது ராசியை மாற்றும் போதெல்லாம், சில ராசிக்காரர்கள் அதன் விளைவாக நல்ல பலன்களைப் பெறுகிறார்கள். சில ராசிக்காரர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
(2 / 6)
கேது கிரகம் தனது ராசியை வரக்கூடிய மே 18ஆம் தேதியன்று மாற்றப்போகிறது. கன்னி ராசியை விட்டு வெளியேறிய பிறகு கேது பகவான், சிம்ம ராசியில் நுழைகிறார். இந்த பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் புத்தாண்டில் அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
(3 / 6)
மிதுனம்: 2025ஆம் ஆண்டில், கேது பகவான், உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழையப்போகிறார். இந்த வீடு நிதி ஆதாயங்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். சில பழைய முதலீடுகளிலிருந்தும் நீங்கள் பணம் பெறலாம். தந்தை வழி சொத்து உங்களுக்குக் கிடைக்கலாம். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய மனை வாங்க அல்லது ஒரு வாகனம் வாங்க முடிவு செய்யலாம்.
(4 / 6)
விருச்சிகம்: இந்த ராசியில் இருந்து கேது பத்தாம் வீட்டில் நுழைகிறார். அது வேலை மற்றும் தொழில் வாழ்க்கை தொடர்பானது. எனவே, உங்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் முதலாளி உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவார். உங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதைக் கருத்தில் கொள்ளலாம். வேலை மாற்றத்திற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். நீங்கள் ஒரு நல்ல புதிய வேலையைப் பெறமுடியும். உங்கள் வங்கி இருப்பு நிரம்பும். வெளிநாடு செல்லலாம்.
(5 / 6)
தனுசு: வேத விற்பன்னர்களின் கூற்றுப்படி, கேது கிரகம் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறது. இது ஆன்மிகம் மற்றும் மதம் தொடர்பான இடங்களின் வீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நெருக்கடி காலம் முடிவடையும். திருமணமாகாதவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். மதம் மற்றும் ஆன்மீகத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.
(6 / 6)
பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்