Venus: வேகமெடுத்த சுக்கிரன்.. பொங்கலுக்குப் பின் பொங்கி எழப்போகும் ராசிகள்
- ஜோதிடத்தில் சுக்கிரன் லக்கியான கிரகமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒருவருக்கு சுக்கிர திசையால் செல்வச்செழிப்பினைப் பெறுவர். ஆகையால் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் நிறைய கிடைக்கும்.
- ஜோதிடத்தில் சுக்கிரன் லக்கியான கிரகமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒருவருக்கு சுக்கிர திசையால் செல்வச்செழிப்பினைப் பெறுவர். ஆகையால் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் நிறைய கிடைக்கும்.
(1 / 6)
நவகிரகங்களில் மகிழ்ச்சி, செல்வம், காதல், திருமணம் போன்றவற்றின் அதிபதி சுக்ரன். சுப கிரகம் என்று சொல்லப்படும் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதம் ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கவுள்ளார். சுக்கிரனின் பெயர்வால், பொங்கலுக்குப் பின் மூன்று ராசியினருக்கு நல்வாய்ப்புகள் கிடைக்கும்.
(2 / 6)
மேஷம்: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்வு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்த காலகட்டத்தில் பணியில் நற்பெயர், ஊக்கத்தொகை ஆகியவை கிடைக்கும். இந்த ராசியினரின் வருவாய் படிப்படியாக அதிகரிக்கும். இன்னொருபுறம், ஊழியர்கள் இடையே இருந்த பிணக்குகள் குறையும். பாசிட்டிவான அணுகுமுறை மேலோங்கும். ஒன் சைடாக காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதல் டபுள் சைடாக மாறும். பிற நிறுவனங்களில் பணிதேடும் மேஷராசியினருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
(3 / 6)
மிதுனம்: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் நகர்வினால் பணப்பிரச்னைகள் நீங்கும். குறிப்பாக, உங்களுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிப்பவர்கள் கூட இக்கால கட்டத்தில் கொடுத்துவிடுவர். வங்கியில் உங்கள் சேமிப்புக்கணக்கிலுள்ள தொகை கூடும். பூர்வீகமாக கிடைக்கவேண்டிய சொத்துகள் கைவந்து சேரும். அயராது உழைத்து நற்பலனைப் பெறுவீர்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும்.நீண்டநாட்களாக வாங்க நினைத்ததை வாங்குவீர்கள்.
(4 / 6)
சிம்மம்: இக்கால கட்டத்தில் சிம்ம ராசியினருக்கு சுயதொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். மாற்றியோசித்து அதனை செயல்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். நல்வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். சைடு பிசினஸ் கைகூடும். வியாபாரத்தில் சரியாகத் திட்டமிட்டால் கணிசமான லாபம் கிடைப்பது உறுதி.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்