மனஅழுத்தத்தை போக்க மூன்று எளிய வழிகள்
- நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் முடிவே இல்லாமல் பணி தொடர்பான மனஅழுத்தத்தையும், வெளி உலகில் தொற்று நோய் அச்சுறுத்தலால் மனதில் உண்டாகும் அழுத்தங்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே உணர வைக்கிறது. இந்த அழுத்தங்கள், மன கவலையை போக்க பின்பற்ற வேண்டியவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
- நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் முடிவே இல்லாமல் பணி தொடர்பான மனஅழுத்தத்தையும், வெளி உலகில் தொற்று நோய் அச்சுறுத்தலால் மனதில் உண்டாகும் அழுத்தங்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே உணர வைக்கிறது. இந்த அழுத்தங்கள், மன கவலையை போக்க பின்பற்ற வேண்டியவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 4)
உணர்வுகளை விழிப்புடன் வைத்திருப்பது: மனஅழுத்தத்தை விரட்டுவதற்கான முதல் படிநிலையாக உணர்வுபூர்வமாக மிகவும் விழிப்புடன் இருப்பதுதான். உங்களுக்கு மனஅழுத்தம், கவலை போன்றவை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக நீங்கள் மனநலம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதுதான். மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளில் சரணடைந்துகொள்ள வேண்டும். தியான பயிற்சி, MBCT எனப்படும் மனம்சார்ந்த அறிவாற்றல் சிகிச்தை முறைகளை மனஅழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் அப்போதைய தருணத்தில் உங்களை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு விதமான புத்தகங்கள், செயலிகள், வெப்சைட்கள் போன்றவை உள்ளன. இவற்றின் மூலம் அடிப்படை தியான பயிற்சிகளை கற்று அறிந்து கொள்ளலாம்
(File Photo )(2 / 4)
உடற்பயிற்சியை வழக்கமாக்கி கொள்வது: அதிக கவலையுடன் இருப்பவர்கள் தங்களது உடலை அசைத்து செயல்படுத்துவது நல்ல பலன் அளிக்கும். உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, மனநலம் சார்ந்து பொதுவான பிரச்னைகள், அறிகுறிகளை வெளிப்படுத்தவிடாமல் பார்த்துக்கொள்ளும். ஏரோபாலிக் பயிற்சிகள் தொடர்ந்து செய்வதன் மூலம் மனஅழுத்தம் கணிசமாக குறைவதை இரண்டு வாரங்களில் உணரலாம் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மிக முக்கியமாக உடல் ரீதியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மனஅழுத்தத்தை குறைப்பது மட்டுமில்லாமல் மனநிலை மாற்றத்தையும் உண்டாக்குகிறது. தொடக்கத்தில் நடைப்பயிற்சி போன்ற லேசான பயிற்சிகளின் மூலம் உடல் இயக்கம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
(Gustavo Fring)(3 / 4)
(4 / 4)
தூக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பது: நல்ல தூக்கமும் மனஅழுத்தத்தை போக்குவதற்கான அருமாருந்தாகவும், மனச்சோர்வை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்கிறது. இரவில் நீண்ட நேரம் விழக்காமல் நேரத்துக்கு தூங்கி, காலையில் விழப்பது தெளிவான மனநிலை பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேசமயம் சரியான தூக்கம் இல்லாதவர்கள் மனஅழுத்தம், மயக்கம் மற்றும் சோம்பல் உணர்வை உண்டாக்கும். தூக்கம் என்பது மனிதர்களின் முக்கிய செயல்பாடாக உள்ளது. ஏனென்றால் தூங்கும்போதுதான் மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டும் தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. இதனை ரிசார்ஜ் செய்துகொள்வதாகவும் கூறலாம். சரியான தூக்கம் இல்லாவிட்டால் தசைகள் மறுசீரமைப்பு, நினைவாற்றல் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம்
(Shutterstock)மற்ற கேலரிக்கள்