உங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசியங்கள், வணங்க வேண்டிய கோயில்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட அனைத்து பலன்கள் குறித்தும் ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர் கூறிய ஜோதிடத்தை இங்கு காண்போம்.
(1 / 8)
ரோகிணி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம். அதன் அதிபதி சந்திரன். ரிஷப ராசியில் முழுமையாக அடங்கியிருக்கும் நட்சத்திரம். ரிஷபத்தில் 40 பாகை முதல் 53 பாகை 20 கலை வரை அமைந்திருக்கும். இதன் அதிதேவதை கிருஷ்ணன்.
(2 / 8)
தெய்வம் பிரம்மா. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ணரை வழிபடுவதன் மூலமும், நாவல்மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும், ஆந்தைக்கு தீங்கி விளைவிக்காமல் இருப்பதாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.
(3 / 8)
வணங்க வேண்டிய ஆலயங்கள் : நாவல்மரம் விருட்சம் ஸ்தலமரமாக உள்ள கோயில்களுக்கு செல்லலாம். கழுகுமலை ஜம்புநாத ஈஸ்வரர், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன். திருவானைக்கோயில் ஜம்புலிங்கேஸ்வரர், சோலைமலை சுப்பிரமணியசுவாமி, மோகனூர் கருப்புசாமி ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது நல்லது.
(4 / 8)
நோய்கள் : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொண்டை வலி, மலச்சிக்கல், தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். முகம், வாய், நாக்கு, உதடு தொடர்பான நோய்கள் அடிக்கடி வந்து ஏற்படும். ஜலதோஷம், மூக்கடைப்பு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படும்.
(5 / 8)
கல்வி : கலை சார்ந்த படிப்புகள், மருத்துவம், புள்ளியியல், தாவரவியல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் தொடர்பான படிப்புகள். இத்துடன் லக்னத்திற்கு 2, 4 பாவங்களையும், அந்த பாவ அதிபதிகளின் நிலைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.
(6 / 8)
வேலைவாய்ப்பு, வியாபாரம் : ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியான சந்திரன் 10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டாலும், ரிஷப ராசியுடன் தொடர்பு கொண்டாலும் கடற்படை, கப்பல் துறை, கடல் வாணிபம், அரசியல், விவசாயம், மாட்டுப்பண்னை, வீடு நிலம் சார்ந்த ரியஸ் எஸ்டேட், எண்ணெய், பெட்ரோல் பங்க், பார், உணவகம், வாசனை திரவிய உற்பத்தி, பழ வியாபாரம், ஆடை, ஆபரண தொழில், நகை வியாபாரம், பேனா, புத்தகம், பெண்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்கள், அதிக நெய் கலந்த இனிப்பு விற்பனை, டிராவல்ஸ், பாதுகாப்புத்துறை, டிசைனர், இன்டீரியர் டெக்ரேஷன், பியூட்டி பார்லர், கட்டுமான துறை, அக்கவுண்டன்ட், கம்ப்யூட்டர் சென்டர், சினிமா, சினிமா துறை தொடர்பான வேலைகள், போஸ்ட் ஆபிஸ், அலங்கார கண்ணாடி விற்பனையகம் போன்ற தொழில் அமையும்.
(7 / 8)
நட்சத்திர அதிபதியான சந்திரன் 2, 6, 10ம் பாவம் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு கொள்வது அவசியம்.
மற்ற கேலரிக்கள்