கிரஹப்பிரவேசம்.. புதுமனை புகுவிழாவில் எதைச் செய்வதால் இறைவனின் ஆசீர்வாதம் கிட்டும்.. முன்னோர்கள் செல்வது இதைத் தான்!
- கிரஹப்பிரவேசம்.. புதுமனை புகுவிழாவில் எதைச் செய்வதால் இறைவனின் ஆசீர்வாதம் கிட்டும்.. முன்னோர்கள் செல்வது இதைத்தான்!
- கிரஹப்பிரவேசம்.. புதுமனை புகுவிழாவில் எதைச் செய்வதால் இறைவனின் ஆசீர்வாதம் கிட்டும்.. முன்னோர்கள் செல்வது இதைத்தான்!
(1 / 7)
சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. கஷ்டப்பட்டு வாங்கிய அல்லது கட்டப்பட்ட வீட்டிற்குள் நுழைந்த பின், எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும். புதிய வீட்டிற்குள் நுழையும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் அந்த வீடு எப்போதும் ஆரோக்கியத்திற்கான வீடாக மாறும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். விரைவில் புதுமனை புகுவிழாவிற்குள் நுழைய இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
(2 / 7)
வீட்டிற்குள் நுழையும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்:முகூர்த்த நேரம்:இந்து பாரம்பரியத்தின்படி, கிரஹப்பிரவேச விழாவில் தேதி மற்றும் நேரம் மிகவும் முக்கியமானது. ஒரு ஜோதிடரை அணுகி, உங்கள் ஜாதகம் மற்றும் கிரக நிலைகளுக்கு ஏற்ப ஒரு தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய மறக்காதீர்கள். ஒரு நல்ல முகூர்த்தம் என்பது உங்களுக்கு அனைத்து வகையான பாஸிட்டிவ் ஆன ஆற்றல்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும். மேலும் அது உங்கள் புதிய வீட்டில் மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்தில் நற்சூழல்களையும் எளிதாக்கும்.
(3 / 7)
வாஸ்து பூஜை:உங்கள் புதிய வீட்டை எதிர்மறை அதிர்வுகளிலிருந்து விலக்கி வைக்கவும், நேர்மறையான சூழ்நிலையைக் கொண்டு வந்து அதை மங்களகரமானதாக மாற்றவும் வாஸ்து பூஜை மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணரை அணுக வேண்டும். வாஸ்து தோஷங்கள் சில நேரங்களில் வறுமை மற்றும் உடல்நலக் குறைவுக்கு வழிவகுக்கும்.
(4 / 7)
வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள்:புதிய வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு புனித நீரைத் தெளித்தல் மற்றும் தூபம் எரிப்பது ஒரு முக்கியமான செயலாகும். இந்த சடங்கு வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றவும்,சூழல்களை நேர்மறையாக மாற்றவும் பயன்படுகிறது. வீட்டின் சுத்தம் ஆன்மிக வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான சூழலை உருவாக்குகிறது மற்றும் தெய்வங்களின் ஆசீர்வாதங்களை வழங்குகிறது.
(5 / 7)
புனித நெருப்பு:கிரஹ பிரவேசத்தின்போது வீட்டிற்குள் அக்னி பூஜை செய்வது வீட்டின் விருத்திக்கு உதவுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஹோம குழியைச் சுற்றி அமர்ந்து புனித நெருப்பை வழிபடும்போது, புதிய வீடு மங்களகரமானதாக மாறும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.
(6 / 7)
மந்திரங்கள்:தமிழ் அல்லது பிறமொழி சாஸ்திர ஸ்லோகங்களை உச்சரிப்பது உங்கள் புதிய வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும் மற்றும் ஆன்மிக சூழ்நிலையை உருவாக்கி அனைத்து தெய்வங்களுடைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். ஹோமம் வளர்ப்பவர்களின் ஆலோசனைப்படி மந்திரங்களை உச்சரிப்பதும், கடவுள்களை பிரார்த்தனை செய்வதும் புதிய வீட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.அலங்காரம்:கிரக பிரவேசத்தின் போது உங்கள் புதிய வீட்டை அழகாகவும் கவர்ச்சியாகவும் அலங்கரிப்பது எல்லா வகையிலும் நல்லது. புதிய வீட்டை வண்ணமயமான உருவங்கள், மாலைகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிப்பது மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குகிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறலாம். அவர்கள் உங்களுக்கு அரிய பரிசுகளை வழங்குவார்கள்.
(7 / 7)
பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்