lizard Prediction : பல்லி இந்த இடத்தில் விழுந்தால் ஆபத்து.. குறிப்பா பெண்களுக்கு இந்த பிரச்சனை வரும்!
பல்லி நம் மீது விழுவது என்பது அதிர்ஷ்டம் கிடையாது. நமது பஞ்சாங்கத்தில் பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன தோஷம் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்கத்தில் ஒரு சில இடங்கள் பல்லிகள் விழுந்தால் யோகம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அது எந்த இடம் என்ன யோகம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
(1 / 6)
பல்லி தென்கிழக்கில் இருந்து சத்தமிட்டால் அது தீமை என சொல்லப்படுகிறது. அதேபோல பல்லி தெற்கிலிருந்து சத்தமிட்டால் அது சுபம் என பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது.
(2 / 6)
அதேபோல தென் மேற்கிலிருந்து நமக்கு பல்லி சத்தமிட்டால் அது பந்து வரவு. வடமேற்கிலிருந்து சப்தமிட்டால் அது வஸ்திர லாபம். அதாவது உடைகள் தானமாக கிடைக்கும்.
(3 / 6)
வடக்கிலிருந்து நமக்கு சத்தமிட்டால் திரவிய லாபம் கிடைக்கும். ஏதாவது பொருள் நம்மிடம் சேரும். வட கிழக்கிலிருந்து பல்லி பலன் சொன்னால் லாபகரமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தமாம்.
(4 / 6)
நம் தலைக்கு மேல் இருந்து சத்தம் எழுப்பினால் நாம் செய்யப்போகும் காரியம் வெற்றி அடையும் என்பது அர்த்தமாம். அதாவது பூமியின் கீழ் நம் பாதத்தின் கீழ் இருந்து சத்தம் எழுப்பினால் காரிய அனுகூலம் உண்டு.
(5 / 6)
பல்லி நம் குடிமி அதாவது தலைமுடி மீது விழுந்தால் சுபம் என்று பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. கபாலத்தில் விழுந்தால் பிரிய சம்பத்து, இடது கபாலத்தில் விழுந்தால் பிரியதரிசனம், நெற்றியில் விழுந்தால் லட்சுமி கரம், புருவத்தில் விழுந்தால் அரசன் நன்மை, வலது கண்ணில் விழுந்தால் சுபம் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
(6 / 6)
பரிகாரம் : பல்லி விழுந்தால் அந்த தோஷத்தில் இருந்து நாம் மீள காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்புறம் வரும்போது அங்கு உள்ள படிகள் மீது ஏறி அங்கு இருக்கும் பல்லியை தொட்டு விட்டு வருவது பல்லியினால் ஏற்பட்டிருக்கும் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
மற்ற கேலரிக்கள்