Thirumangalyam: எச்சரிக்கை பெண்களே.. தாலியில் ஊக்கு மாட்டி வைப்பரா நீங்கள் .. எத்தனை பிரச்சனை வரும் தெரியுமா?
கணவன் வெளியூரில் இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசிர்வதித்து பெண்ணின் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து விடலாம். வெள்ளி கிழமை திருமாங்கல்யத்தில் பூ வைப்பது மேலும் விஷேசமான பலன்களை தரும். கணவனின் முன்னேற்றத்தை தடை செய்யும் சக்திகளை விரட்ட இந்த திருமாங்கல்யம் பயன்படும்.
(1 / 6)
ஒரு பெண் அணிந்திருக்கும் திருமாங்கல்ய கயிற்றை எப்போது மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக வைத்துக்கொள்வது நல்லது. தினமும் குளிக்கும் போது திருமாங்கல்ய கயிற்றில் மஞ்சள் தேய்த்து குளிப்பது எப்போதும் கயிற்றை மஞ்சளாக வைத்திருக்கும். தங்கத்தில் தாலி அணிந்திருப்பவர்கள் அதில் மஞ்சள் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
(2 / 6)
கணவன் வெளியூரில் இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசிர்வதித்து பெண்ணின் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து விடலாம். வெள்ளி கிழமை திருமாங்கல்யத்தில் பூ வைப்பது மேலும் விஷேசமான பலன்களை தரும். கணவனின் முன்னேற்றத்தை தடை செய்யும் சக்திகளை விரட்ட இந்த திருமாங்கல்யம் பயன்படும்.(Gettyimages)
(3 / 6)
நாம் நினைத்த போது எல்லாம் தாலி கயிறை மாற்ற கூடாது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே மாற்ற வேண்டும்.
(4 / 6)
திங்கள் செவ்வாய் வியாழன் ஆகிய நாட்களில் தாலி கயிறை மாற்றுவதற்கு உகந்த நாட்கள். வெள்ளிக்கிழமை மாற்றுவது கூடாது. ஆடிப்பெருக்கு நாளில் தாலி கயிறு மாற்றுவது கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் என்று நம்பப்படுகிறது.
(5 / 6)
திருமாங்கல்யம் உடையும் தறுவாயில் இருந்தால் மட்டும் தான் அதை மாற்ற வேண்டும். அதை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதும் நல்லதல்ல என்றே நம்பப்படுகிறது.
(6 / 6)
இரும்பினால் ஆன எந்த பொருட்களையும் திருமாங்கல்யத்தில் வைக்க கூடாது. காரணம் சனிபகவான் பார்வை பெற்ற ஒரு உலோகம் ஆகும். இது எதிர்மறை ஆற்றலை தரும். சில பெண்கள் தங்கள் தாலியில் ஊக்கு மாட்டி வைத்திருப்பார்கள். இது தங்கதிற்கு கேடு விளைவிப்பதோடு கணவனின் வருமானத்தையும் தடை செய்யும் என்று நம்பப்படுகிறது.(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)(SunithaR / Twitter)
மற்ற கேலரிக்கள்