Thirumana Porutham: ’காதல் திருமணத்திற்கு ஜாதக பொறுத்தம் தேவையா?’ ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை இதோ!
- “Thirumana Porutham: திருமண பொருத்தம் என்பது ஒரு முழுமையான அறிவியல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கணிப்பு முறை மட்டுமே. திருமணம் என்பது இரு மனங்களின் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது”
- “Thirumana Porutham: திருமண பொருத்தம் என்பது ஒரு முழுமையான அறிவியல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கணிப்பு முறை மட்டுமே. திருமணம் என்பது இரு மனங்களின் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது”
(1 / 7)
திருமண பொருத்தம் என்பது திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த ஜாதகங்களை ஒப்பிட்டு, அவர்கள் வாழ்க்கையில் இணைந்து பயணித்தால் சந்தோஷமாக இருக்குமா என்பதை கணிக்கும் ஜோதிட முறையாக உள்ளது. இந்த முறை பல நூற்றாண்டுகளாக தமிழ் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
(2 / 7)
10 பொருத்தங்களில் குறைந்தது 8 பொருத்தங்கள் வரை இருந்தால், அந்த திருமணம் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
(3 / 7)
காதல் செய்பவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அவர்களுக்கு ஜாதக பொருத்தங்களை விட மனப்பொருத்தம்தான் முக்கியம் என ஜோதிடர் ஷெல்வி தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார்.
(4 / 7)
காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதன் மூலம் காதல் உண்டாகிறது. காதல் தூய்மையானதாக இருந்தால் ஜாதக பொறுத்தமோ, பெயர் பொறுத்தமோ பார்க்க தேவை இல்லை என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா வேலூர் கூறுகிறார்.
(5 / 7)
குரு சொல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் போதோ அல்லது தெய்வ சகுணம் மூலம் நிச்சயமாகும் பெண்ணையோ, அல்லது கர்பம் தரித்த பெண்ணையோ திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க அவசியம் இல்லை.
(6 / 7)
ஆனால் இவர்களின் திருமண தேதியை முடிவு செய்ய கண்டிப்பாக ஜாதகம் பார்க்க வேண்டும். அதே போல் மணமகள் மற்றும் மணமகன் வாழ்கை குறித்து தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்கலாமே தவிர திருமண பொறுத்தம் பார்க்க கூடாது.
மற்ற கேலரிக்கள்