Horoscope Luck: ‘ஐயா… டாக்டர் சாமி…’ பிறப்பிலேயே மருத்துவம் படிக்கும் யோகம் கொண்ட ராசிகள் யார் யார் தெரியுமா?
பிறப்பிலேயே மருத்துவம் படிக்கும் யோகம் கொண்ட ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
(1 / 7)
Horoscope Luck: ‘ஐயா… டாக்டர் சாமி…’ பிறப்பிலேயே மருத்துவம் படிக்கும் யோகம் கொண்ட ராசிகள் யார் யார் தெரியுமா?
(2 / 7)
மருத்துவம் படிப்பதற்கான யோகம், எந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக கிடைக்கும் என்பது குறித்து பிரபல ஜோதிடரான சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். இது குறுத்து அவர் பேசும் போது, “ இதில், முதலிடம் பெறுவது மகர ராசிதான். உத்திராடம், அவிட்டம் திருவோணம் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் கொண்ட மகர ராசிக்கு, மருத்துவ படிப்பை படிப்பதற்கான யோகம் அதிகமாக இருக்கிறது.
(3 / 7)
ஹோட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவத்துறை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால், உங்களுக்கு சனி பகவானின் அருள் கண்டிப்பாக வேண்டும். அவிட்டம் 1 மற்றும் 2ம் பாதங்களை பெற்ற நட்சத்திரங்களுக்கு, மருத்துவத்துறையில் படிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
(4 / 7)
சனிபகவானும், செவ்வாயும் சுப கிரகங்களோடு தொடர்பு கொள்ளாமலோ அல்லது சனிபகவான் நீச்சமோ அல்லது வக்ரகதியை அடையாமலோ, நீங்கள் மருத்துவராக மாற முடியாது. மேஷ ராசிக்காரர்களுக்கும் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.
(5 / 7)
அஸ்வினி, கிருத்திகை பரணி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் மேஷ ராசிக்குள் அடங்கும். இன்னும் சொல்லப்போனால், புகழ்பெறும் மருத்துவராகவும், அந்த ராசிக்காரர்கள் மாறுவார்கள். மேஷ ராசியில் சனி பகவான் நீச்சம் பெறுவார்.
(6 / 7)
சனிபகவான் எப்பொழுது தன்னுடைய சுயத் தன்மையை இழந்து, வக்ரகதியோ அல்லது நீச்சமோ அடைகிறாரோ, அங்கேயே அவர் அதீத சுப கிரகமாக மாறிவிடுகிறார்.
மற்ற கேலரிக்கள்