Top 10 Safest Cities in India: இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான நகரங்கள் எவை.. தமிழ்நாட்டில் இருந்து எத்தனை நகரங்கள்
- Top 10 Safest Cities in India: இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல காவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பையும், குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 நகரங்கள் எவை என்பதை பார்க்கலாம்
- Top 10 Safest Cities in India: இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல காவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பையும், குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 நகரங்கள் எவை என்பதை பார்க்கலாம்
(1 / 11)
என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கையின்படி, இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களின் லிஸ்ட் வெளியிடப்ப்டடுள்ளது. இந்த நகரங்கள் பாதுகாப்பின் அடிப்படையில் மற்ற இடங்களை விட சிறந்ததாகக் கருதப்படுகின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல காவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலையும் கொண்டுள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு அடிப்படையில் இந்த 10 நகரங்கள் மற்ற பெருநகரங்களை விட பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. அங்கு நிலவும் குறைவான குற்ற விகிதங்கள், நவீன பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வலுவான சட்டம் ஒழுங்கு ஆகியவை அவர்களை வாழ்வதற்கும் பயணம் செய்வதற்கும் ஏற்றதாக ஆக்குகின்றன
(2 / 11)
10. கோழிக்கோடு - இயற்கை அழகு மற்றும் பாதுகாப்பான சூழலின் சங்கமம்: கேரளா நகரமான 'காலிகட்' என்றும் அழைக்கப்படும் கோழிக்கோட்டில், ஐபிசி குற்ற விகிதம் 397.5% ஆகும். அதன் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்பு மற்றும் காவல்துறை விழிப்புணர்வின் காரணமாக, இது இந்தியாவின் பாதுகாப்பான 10 நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது
(3 / 11)
9. மும்பை - கனவுகளின் நகரம் மற்றும் வலுவான காவல்: இந்தியாவின் பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு தலைநகரான மும்பையில், ஐபிசி குற்ற விகிதம் 376.3% ஆகவும், குற்றப்பத்திரிகை விகிதம் 77.1% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் மும்பை காவல்துறை, சைபர் குற்றப் பிரிவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) முக்கிய பங்கு வகிக்கின்றன
(4 / 11)
8. அகமதாபாத் - பொருளாதார மையம் மற்றும் பாதுகாப்பான சூழல்:
குஜராத்தின் பொருளாதார மையமாக அகமதாபாத் உள்ளது. மேலும் ஐபிசி குற்ற விகிதம் 360.1% மற்றும் குற்றப்பத்திரிகை விகிதம் 88% ஆகும். நவீன கண்காணிப்பு அமைப்பும் திறமையான காவல் படையும் இங்கு பாதுகாப்பை உறுதி செய்கின்றன
(5 / 11)
7. பெங்களூரு - தொழில்நுட்ப மையம் மற்றும் பாதுகாப்பின் சங்கமம்:
'இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் பெங்களூருவில், ஐபிசி குற்ற விகிதம் 260.5% ஆகும். நகரத்தின் வலுவான சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு முயற்சிகள் நகரை பாதுகாப்பான இடமாக மாற்றுகின்றன
(6 / 11)
6. ஹைதராபாத் - பாதுகாப்பு மற்றும் நவீன மேம்பாட்டின் தனித்துவமான கலவை: 'முத்துக்களின் நகரம்', 'பிரியாணி நகரம்' என்று அழைக்கப்படும் ஹைதராபாத்தில், ஐபிசி குற்ற விகிதம் 266.7% ஆகும். SHE Teams, CCTV கண்காணிப்பு மற்றும் கடுமையான காவல் பணிகளால் இந்த நகரம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர, குறைவான காஸ்ட் ஆஃப் லிவிங் மற்றும் சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது
(7 / 11)
5. புனே - கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மத்தியில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை: ஐபிசி குற்ற விகிதம் 219.3% மற்றும் குற்றப்பத்திரிகை விகிதம் 81% உடன் புனே இந்தியாவின் ஐந்தாவது பாதுகாப்பான நகரமாகும். இங்குள்ள காவல்துறை விழிப்புடன் இருப்பதோடு, மகிளா சுரக்ஷா செல், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. புனேவில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) மற்றும் சிம்பியோசிஸ் பல்கலைக்கழகம் போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களும் உள்ளன, இது மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக அமைகிறது
(8 / 11)
4. சூரத் - வைர நகரம் மற்றும் இறுக்கமான பாதுகாப்பு: சூரத் அதன் வைரம் மற்றும் ஜவுளித் தொழில்களுக்குப் பிரபலமானது. இது ஐபிசி குற்ற விகிதம் 215.3% மற்றும் குற்றப்பத்திரிகை விகிதம் 84.6% ஆகும். அதன் நவீன பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளன
(9 / 11)
3. கோவை - திறமையான காவல் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டுக்குப் பிரபலம்: கோவை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது, இது ஐபிசி குற்ற விகிதம் 211.2% மற்றும் குற்றப்பத்திரிகை விகிதம் 87.4% ஆகும். அதன் வலுவான சட்டம் ஒழுங்கு, விரைவாக செயல்படும் குழுக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு அமைப்புகள் இந்த நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்குகின்றன
(10 / 11)
2. சென்னை - தொழில்நுட்பம் மற்றும் விழிப்புடன் கூடிய காவல் துறையின் கோட்டை: ஐபிசி குற்ற விகிதத்தில் சென்னை 173.5% ஆக இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பு மற்றும் வலுவான காவல் நிர்வாகம் காரணமாக இங்கு குற்ற விகிதம் குறைவாக உள்ளது. சென்னையில் ஐஐடி மெட்ராஸ் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளும் உள்ளன. இது தவிர, பெண்களுக்கான பிரத்யேக ஹெல்ப்லைன்கள் மற்றும் காவல் நிலையங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமைகின்றன
(11 / 11)
1. கொல்கத்தா - இந்தியாவின் கலாச்சார தலைநகரம் மற்றும் பாதுகாப்பான நகரம்: 78.2% ஐபிசி குற்ற விகிதத்துடன் நாட்டின் பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா இடம் பெற்றுள்ளது. காவல்துறையின் செயல்பாடும், நிர்பயா நிதியின் கீழ் நடத்தப்படும் பாதுகாப்பான நகரத் திட்டமும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளன. இது தவிர, கொல்கத்தா குறைவான காஸ்ட் ஆஃப் லிவிங், உயர்நிலை கல்வி மற்றும் சிறந்த சுகாதார வசதிகளுக்கும் பிரபலமானதாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கொல்கத்தா இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது
மற்ற கேலரிக்கள்