ருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
- Ruchak Raj Yoga: செவ்வாய் பகவானின் விருச்சிக ராசி பயணத்தால் உருவாகும் இந்த ருச்சக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டசாலியாக மாறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என இங்கே காணலாம்.
- Ruchak Raj Yoga: செவ்வாய் பகவானின் விருச்சிக ராசி பயணத்தால் உருவாகும் இந்த ருச்சக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டசாலியாக மாறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என இங்கே காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தனது ஒரு ராசி சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் செவ்வாய் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான விருச்சகத்தில் நுழைவது ருச்சக யோகத்தை உருவாக்கப் போகின்றது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகம் என கருதப்படுகிறது. 22 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ராஜயோகம் உருவாகும் என கூறப்படுகிறது.
(3 / 6)
பஞ்ச மகா புருஷ ராஜ யோகங்களில் இந்த ருச்சக ராஜயோகமும் ஒன்று என கூறப்படுகிறது. செவ்வாய் பகவானின் விருச்சிக ராசி பயணத்தால் உருவாகும் இந்த ருச்சக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டசாலியாக மாறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என இங்கே காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: செவ்வாய் பகவான் விருச்சக ராசியில் நுழையும் பொழுது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கமான எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
கன்னி ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நுழையப்போவதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வீரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்