Jackpot: புரட்டி பார்க்கப்பட்ட ராசிகள்.. பணத்தில் தள்ளிவிடும் சூரியன் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கள் தான்!
Jackpot: புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இவர்கள் இருவரும் மிதுன ராசியில் ஒன்றாக பயணிக்க போகின்றனர். சூரியன் மற்றும் புதன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
நவ கிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, வியாபாரம், நரம்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்திருக்கின்றார். புதன் பகவான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
(3 / 6)
இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இவர்கள் இருவரும் மிதுன ராசியில் ஒன்றாக பயணிக்க போகின்றனர். சூரியன் மற்றும் புதன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். எதிரியாக முன்னேற்றம் உண்டாகும். செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அனைத்து கால கட்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட கால நிதி சிக்கல்கள் உங்களை விட்டு விலகும்.
(6 / 6)
சிம்ம ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியனின் தாக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதன் பகவானால் உங்களுக்கு யோகம் உண்டாகும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்