Mauni Amavasya : மௌனி அமாவாசை.. கோடி கோடியா அள்ளும் ராசிகள் நீங்கதானா?.. சுக்கிரன் கொட்டுவார்!
- Mauni Amavasya 2025: மௌனி அமாவாசை நீராடல் இன்று ஜனவரி 29ஆம் தேதி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த மௌனி அமாவாசை திருநாள் பலருக்கும் பயனுள்ள திருநாளாக அமையும் இருப்பினும் இந்த மௌனி அமாவாசை திருநாளில் இருந்து ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
- Mauni Amavasya 2025: மௌனி அமாவாசை நீராடல் இன்று ஜனவரி 29ஆம் தேதி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த மௌனி அமாவாசை திருநாள் பலருக்கும் பயனுள்ள திருநாளாக அமையும் இருப்பினும் இந்த மௌனி அமாவாசை திருநாளில் இருந்து ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஜனவரி 28ஆம் தேதி அன்று சுக்கிரன் மீன ராசிக்கு சென்றால் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 6)
மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நீராடலாக கருதப்படும் மௌனி அமாவாசை நீராடல் இன்று ஜனவரி 29ஆம் தேதி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த அமாவாசை திருநாள் பலருக்கும் பயனுள்ள திருநாளாக அமையும் இருப்பினும் இந்த மௌனி அமாவாசை திருநாளில் இருந்து ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: இந்த மௌனி அமாவாசை திருநாள் மற்றும் சுக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பு உங்களுக்கு பாராட்டுகளை பெற்று தரும். பல விருதுகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
மேஷ ராசி: சுக்கிர பெயர்ச்சி மற்றும் மௌனி அமாவாசை திருநாள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வருமானம் உங்களுக்கு அதிகரிக்க கூடும் சேமிப்பு அதிகரிக்கும். படிப்படியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: மௌனி அமாவாசை திருநாள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வீட்டில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். தொழிலில் உங்களுக்கு ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்