Celebs Side Business: நடிப்பு தவிர தொழிலிலும் கொடிகட்டி பறக்கும் பிரபலங்கள்.. என்னென்ன பிஸினஸ் பாருங்க
- South Celebs Side Business: தென்னிந்திய சினிமாக்களில் டாப் பிரபலங்களாக இருந்து வரும் இவர்கள் நடிப்பு தவிர சில பிஸ்னஸிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் டாப் நடிகர், நடிகைகளின் பிஸினஸ் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
- South Celebs Side Business: தென்னிந்திய சினிமாக்களில் டாப் பிரபலங்களாக இருந்து வரும் இவர்கள் நடிப்பு தவிர சில பிஸ்னஸிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் டாப் நடிகர், நடிகைகளின் பிஸினஸ் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
(1 / 10)
தென் இந்திய நட்சித்திரங்கள் பலரும் தற்போது பான் இந்திய ஸ்டார்களாக உருவெடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கான ரசிகர்கள் கூட்டமும் இந்திய அளவில் அதிகரித்துள்ளது. நடிகர், நடிகைகளுக்கு நடிப்பையும் கடந்து தங்களுக்கு இருக்கும் பிரபல பின்புலத்துடன் சில பிஸினஸ்களும் செய்கிறார்கள்.
(2 / 10)
ராம் சரண்: தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் ராம் சரன் ட்ரூஜெட் என்ற ஏர்லைன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஹைதராபாத் போலோ மற்றும் ரைட்டிங் கிளப்பையும் நடத்தி வருகிறார்
(3 / 10)
ஸ்ருதிஹாசன்: தமிழ், தெலுங்கு, பாலிவுட் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர் இசிட்ரோ என்ற பெயரில் சொந்த புரொ்டக்ஷன் ஹவுஸ் வைத்துள்ளார்
(4 / 10)
தளபதி விஜய்: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் பல்வேறு பிஸ்னஸில் ஈடுபட்டு வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் தனது தாயார் ஷோபா பெயரில் திருமண மண்டபத்தை வைத்திருக்கிறார். இது தவிர மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் பெயரிலும் திருமண மண்டபம் வைத்திருக்கிறார்
(5 / 10)
சமந்தா: தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக இருந்து வரும் சமந்தா, சகி என்ற பெயரில் புடவைகளுக்கான பிராண்ட் உருவாக்கி அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். Nourish You என்ற பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்
(6 / 10)
ராணா டகுபதி: தெலுங்கு சினிமாக்களில் ஹீரோ, வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராணா டகுபதி சிஏஏ க்வான் என்ற டேலண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை வைத்துள்ளார். இதனுடன் தனியாக தொழில்நுட்ப நிறுவனமும், காமிக் புக் என்ற புரொ்டக்ஷன் ஹவுஸும் வைத்துள்ளார்
(7 / 10)
தமன்னா: வட இந்தியாவை சேர்ந்தவரான தமன்னா தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக வலம் வந்துள்ளார். தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். இவர் ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் ஆன்லைன் ஜுவல்லரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்
(8 / 10)
நாகார்ஜுனா: தெலுங்கு சினிமாவில் மூத்த ஹீரோவான நாகார்ஜுனா என்-க்ரில், என் ஏசியன் ஈட்டர்ஸ் ஆகிய பெயர்களில் ரெஸ்ட்ராண்ட்களை வைத்துள்ளார்
(9 / 10)
நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் பிராண்டை அறிமுகப்படுத்தினார். இது தவிர லிப் பாம் பிராண்டான தி லிப் பாம் நிறுவனத்திலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளாராம்
மற்ற கேலரிக்கள்